சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்த நிலையில், அவர் முன்னதாக பழைய பேட்டிகளில் பேசிய விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி தான் கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது தனக்காக அப்பா பாரதிராஜா கண்ணீர் விட்ட விஷயங்களை பற்றி […]
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். அன்மையில் அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்தது. தற்போது, அவரது காலமான துயரச் செய்தி, திரையுலகை மட்டுமல்லாமல் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகில் தனது பங்களிப்பை அளித்த மனோஜ், “தாஜ்மஹால்” (1999) திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2023-ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் படம் […]
ஹைதராபாத் : நடிகர் விக்ரம் தற்போது வீர தீர சூரன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு படக்குழு சென்று படத்தை பற்றி பேசி வருகிறார்கள். அந்த வகையில், இன்று ஹைதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர், விக்ரம், எஸ்.ஜே. […]
சென்னை : கமல்ஹாசன் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் (1986) படத்தில் அறிமுகமானவர் நடிகரும் கராத்தே மாஸ்டருமான ஷிகான் ஹுசைனி. விஜய் நடித்த பத்ரி படத்தில் விஜய்க்கு குத்துசண்டை சொல்லிக்கொடுக்கும் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற இவர் நடிப்பை தாண்டி வில்வித்தை கற்றுக்கொடுக்கும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். இதுதொடர்பாக தமிழக விளையாட்டுத்துறை உதவ வேண்டும் என்றும் அண்மையில் வீடியோ வெளியிட்டு இருந்தார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹுசைனி, கடந்த மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிசைக்காக […]
சென்னை : தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட ‘டிராகன்’ திரைப்படம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் திரையரங்குகளில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்தது. பிரதீப் ரங்கநாதன், கயாது லோஹர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கீழ், கலாபதி எஸ் அகோரம், கலாபதி எஸ் கணேஷ் […]
சென்னை : நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தன்னுடய கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக அரசியல் பயணத்தில் ஈடுபடவிருக்கிறார். எனவே, அவருடைய கடைசி திரைப்படம் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக நிலவியுள்ள நிலையில், இப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி (ஜன. 9) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், ரிலீஸ் […]
சென்னை : நடிகர் சல்மான் கான் இப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார் என்கிற தகவல் வந்தவுடன் எழுந்த ஒரே விமர்சனங்கள் என்னவென்றால் சல்மான் கானை விட ராஷ்மிகாவுக்கு 31 வயதுகள் அதிகம் எப்படி ஜோடி செட் ஆகும் என்பது போல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்களை பார்க்கும்போது […]
சென்னை : சினிமாத்துறையில் விவாகரத்து செய்திகள் என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே, தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், டி இமான் ஆகியோர் விவாகரத்து செய்திகளை அறிவித்திருந்தார்கள். அவர்களை தொடர்ந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் மற்றும் பாடகி சைந்தவி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் அறிக்கை வெளியீட்டு அறிவித்திருந்தார்கள். இதனை தொடர்ந்து இருவரும் பேசிக்கொள்ளாமல் இருக்கவில்லை பிரிந்தாலும் நண்பர்களாக […]
சென்னை : நடிகர் அஜித் குமார் தனது சினிமா வாழ்வை தாண்டி தனக்கு பிடித்தமான துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அண்மைக்காலமாக தனது கார் ரேஸிங்கில் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2024 செப்டம்பரில் அஜித் குமார் ரேஸிங் குழுவை ஆரம்பித்த இவர், ஜனவரி 2025-ல் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் 991 பிரிவில் அஜித்தின் அணி 3வது இடத்தை பிடித்து அசத்தியது. இதற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் […]
சென்னை : இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருப்பது என்றால் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள சென்னை – மும்பை போட்டிக்கு தான். இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டிகள் என்றாலே விறு விருப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐபிஎல்லில் எல்-கிளாசிகோ என்றால் இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டியை தான் சொல்வார்கள். இந்த போட்டிக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. […]
சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவுக்கு எமோஷனல் வேணுமா..எமோஷனல் இருக்கு..குத்து பாடல் வேணுமா அதுவும் இருக்கு எனஎதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யா தவறாமல் அவருடைய படங்களுக்கு ஸ்பெஷல் பாடலை சந்தோஷ் நாராயணன் கொடுத்துக்கொண்டு வருகிறார். அப்படி தான் அவர் தற்போது சூர்யா நடித்து வரும் ரெட்ரோ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே, இந்த படத்தில் இருந்து வெளியான […]
சென்னை : விக்ரம் நடித்துள்ள வீரதீரசூரன் திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். விழாவில் பேசிய விக்ரம் படம் எப்படி பட்ட படமாக இருக்கும் […]
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் முதல் பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த சூழலில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது. படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து படம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்துகொண்டு வருகிறார். அப்படி சமீபத்தில் பிரபல நிறுவனமான […]
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆரம்பத்தில் பொங்கல் அன்று திட்டமிடப்பட்டிருந்த இப்படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஏப்ரலுக்கு தள்ளப்பட்டது. முதலில் ஏமாற்றமாக இருந்தாலும், டீசரை பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ரகசியங்கள் […]
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தின் மீதும் இருக்கிறது. இன்னும் இருவரும் பிஸியாக இருந்த காரணத்தால் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. ஆனால், இப்போது பிஸி எல்லாம் முடிந்து இருவரும் வாடிவாசலுக்கு நேரத்தை ஒதுக்கி படத்தை தொடங்கவிருப்பதாக தெரிகிறது. படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ் மங்களகரமா படத்தை பாட்டில் இருந்து ஆரம்பிக்கிறோம் என்பது போல வாடிவாசல் […]
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர் விக்ரம் வீரதீரசூரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை சித்தா எனும் தரமான படத்தை இயக்கிய இயக்குநர் அருண் குமார் இயக்குகிறார் என்பதாலும், படத்தில் விக்ரம் ஆரம்ப காலத்தை போல கிராமத்தில் வசிக்கும் மனிதர் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துள்ள காரணத்தால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த திரைப்படம் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் […]
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக் கொடுக்கும் நோக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான டீசர்களில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்வையாளர்களை கடந்த சாதனையை படைத்திருந்தது. எனவே, இந்த படத்தின் மீது தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா அளவுக்கு […]
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங் செய்து வந்த நிலையில், இவர்களுடைய விஷயம் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. அதன்பிறகு இருவரும் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் சீரிஸில் நடித்து கொண்டிருந்தபோது நெருக்கமான காட்சிகள் வெளிவந்த நிலையில், இருவரும் டேட்டிங் செய்வது உறுதி என இணையவாசிகள் பேசத்தொடங்கிவிட்டார்கள். உடனடியாக தமன்னாவும் அதிகாரப்பூர்வமாகவே விஜய் வர்மாவை காதலிப்பதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இருவரும் இந்த […]
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், இசையமைப்பாளர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கலைஞர் நோய்வாய்ப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிட்டது. இருப்பினும், வழக்கமான பரிசோதனைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு 29 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து வாழ்வதாக, கடந்த […]
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர் ஸ்டாலின், மருத்துவர்களை தொடர்பு கொண்டு அவரின் உடல்நிலைக் குறித்தும், தற்போது அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில்,” ஏஇசைப்புயல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர், மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். இசைப்புயல் @arrahman […]