ஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் ஒரு பரபரப்பு எழுந்து வருகிறது. வந்தநாள் முதல் பலமுறை சர்ச்சைகளில் சிக்கி வருபவர் ஜுலி. ஜுலிக்கு, ஆரவ் மீசை வரைந்தபோது அவரை கண்களை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். இவர் ரஜினி பாட்டுக்கு டான்ஸ் ஆடி முடித்தவுடன், காயத்ரியை தனியாக அழைத்து ஆரவ்வை பார்த்தால் ஏதோ செய்கிறது. பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, எனக்கு பிடித்திருக்கிறது எனவும் கூறியுள்ளார். பின்னர் காயத்ரி இதை மற்றவர்களிடம் கூறி கலாய்த்தார். ஆரவ்வும், ஜுலி ஆரம்பத்தில் கவலையாக இருந்ததால் ஆறுதல் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் “சேரி பிஹேவியர்” என்று காயத்ரி ரகுராம் பேசியதற்காக தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களில் ஒருவர் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம். இவர் தன் சக போட்டியாளரை சேரி பிகேவியர் என ஆத்திரத்துடன் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “காயத்ரி ரகுராம் சேரி வாழ் மக்களை அவமானப்படுத்திவிட்டார்” என்று சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். தவிர இந் நிகழ்ச்சியில் ஆபாசமாக நடிகைகள் […]
நடிகர் சூர்யா உள்பட 8 பேர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு நடிகைகள் மஞ்சுளா, ஸ்ரீப்ரியா, நமீதா உள்ளிட்டோர் குறித்து கூறிய கருத்துகளை கண்டித்து அந்த செய்தியை வெளியிட்ட தினசரி பத்திரிக்கையை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கக் கூட்டத்தில் கண்டன கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர்கள் விவேக், சூர்யா, சத்யராஜ், சரத்குமார், அருண்விஜய், நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட […]
போதைப்பொருள் விற்பனை வழக்கில் நாசா விஞ்ஞானி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தெலுங்கு திரைத்துரையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாசா விண்வெளி ஆய்வுக்கழகத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் அனீஷ். இவர் போதைப் பொருள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து கோகைன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரூத்தூர் அகர்வால் என்பவருடன் விஞ்ஞானி அனீஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெலுங்கு திரை பிரபலங்களுக்கும் இதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. […]
விஜய் டிவியில் தினசரி வெளியாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாக கூறி, அதற்கு தடை விதிக்க கோரி இந்து மக்கள் கட்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி அமைப்பின் தலைவர் சிவா சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது, இந்திய மக்கள் மானமே முக்கியம் எனும் கொள்கைகள் உடையவர்கள், […]