BiggBoss நிகழ்ச்சியில் கடந்த வாரம் வையாபுரி அவர்கள் வெளியேற்றப்பட்டார். பொதுவாக எலிமினேட் ஆகுபவர்கள் கமல்ஹாசனுடன் கலந்துரையாடிவிட்டு தான் செல்வார்கள். அப்படி வையாபுரியும் கமல்ஹாசனுடன் சிறுது நேரம் கலந்துரையாடினார். அப்போது வையாபுரி, அண்மையில் தன் குடும்பத்துடன் ரஜினி அவர்களை நேரில் சந்தித்தேன். அப்போது நான் உங்களுடன் நடித்த படங்களை பற்றி அவர் பேசினார் என்று கூறினார். உடனே கமல்ஹாசன் ரஜினி என்னுடைய படங்களை பார்த்தது தனக்கு பெருமையாக இருப்பதாக கூறியுள்ளார்.
அஜித்தின் விவேகம் படம் எப்படி ஒரு பிரம்மாண்ட வரவேற்பில் வெளியாகி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அஜித் நடித்த எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாரானதோடு பெரிய தொகைக்கும் வியாபாரம் ஆகியிருந்தது. இந்த நிலையில் அஜித்தின் விவேகம் பட வியாபாரத்தை விட விஜய்யின் மெர்சல் படம் 30% அதிக வியாபாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. தற்போது விஜய்யின் மெர்சல் பட டீஸர் […]
BiggBoss நிகழ்ச்சியில் இதுவரை சண்டை, விளையாட்டு, மகிழ்ச்சியான தருணங்கள் என நிறைய பார்த்திருப்போம். ஆனால் 100 நாட்கள் நெருங்க நெருங்க பயங்கரமான சண்டைகள் வரும் என்பது போல் தெரிகிறது. அதன் முதல் கட்டமாக புதிதாக வந்த புரொமோவில் சுஜா மற்றும் சினேகனிடையே சண்டை ஏற்படுகிறது.சுஜா என்னை தொடாதீர்கள் என்று கூற, அதற்கு சினேகன் பிறகு எப்படி விளையாடுவது என்பன போல ஆரவ் மற்றும் பிந்து மாதவியிடம் கூறுகிறார். ஆரவ்வும் விளையாடும் போது திடீரென்று வார்த்தையை விடுகிறார்கள் என்கிறார்.
சிங்கம் 3 படத்திற்கு பின்பு சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் இப்படத்தின் டீசர் இன்னும் வெளியாகவில்லை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். 1980 காலகட்டத்தில் நடப்பதுபோல் இப்படம் அமைந்துள்ளது.
தளபதி விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் துவங்கியுள்ளது. படத்தின் டீஸர் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வரவுள்ள நிலையில், இன்று சென்னையில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெர்சல் படத்தின் மோஷன் போஸ்டர் திரையிடப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரசிகர்கள் “சிஎஸ்கே. .சிஎஸ்கே..” என தொடர்ந்து போட்டி முழுவதும் குரல் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
தமிழக அரசு 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் விருதினை நேற்று அறிவித்தது. பட்டியலில் 2011ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) விருதுக்கு சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாண்டியராஜன் இயக்கிய மெரீனா படத்திற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன பிரச்சனை என்றால் இந்த படம் 2012ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு எப்படி 2011ம் ஆண்டின் விருது அறிவிக்கப்பட்டது என்று […]
தமிழக சினிமா விருது நீண்ட வருடங்களுக்கு பிறகு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 2009-ம் ஆண்டிற்கான விருது பிரகாஷ் ராஜிற்கு வில்லு படத்திற்காக கொடுத்தனர். ஆனால், அதே ஆண்டு அங்காடிதெரு படத்தில் ஏ.வெங்கடேஷின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. தன் வில்லத்தனத்தால் மிரட்டியிருப்பார், அவருக்கு விருது கொடுக்காதது பலருக்கும் வருத்தம் தான். இதுக்குறித்து வெங்கடேஷும் ” ‘வில்லு’ படத்தில் எந்த அடிப்படையில் பிரகாஷ்ராஜ்க்கு ‘வில்லன்’ விருது கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ‘அங்காடித் தெரு’ படத்தில் நடிகர் மகேஷுக்கு சிறந்த அறிமுக […]
சென்னை: தமிழ் பாடல்கள் அதிகம் என்று கூறி ரஹ்மானின் இங்கிலாந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வட இந்தியர்களுக்கு ரஹ்மான் ஒரு தமிழன் என்பது தெரியாதோ? இங்கிலாந்தில் உள்ள வெம்ப்ளி பகுதியில் கடந்த 8ம் தேதி இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் நேற்று இன்று நாளை இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே வட இந்தியரகள் அதாவது இந்திக்காரர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். ரஹ்மான் அதிக அளவில் தமிழ் பாடல்களை பாடியதால் கடுப்பாகி வெளியேறியதாக தெரிவித்துள்ளார்கள். டிக்கெட் நிகழ்ச்சியில் […]
மும்பை: புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுக்க மறுத்துள்ளார் பாலிவுட் நடிகை பிபாஷா பாசு. பாலிவுட் நடிகை பிபாஷா பாசு சின்னத்தி ரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த கரண் சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவருக்குமே மார்க்கெட் இல்லை. இருப்பினும் ஃபேஷன் ஷோக்கள், மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். புகைப்படம் பிபாஷாவும் சரி, கரணும் சரி யார் கேட்டாலும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். இந்நிலையில் அண்மையில் புகைப்படக் கலைஞர்களுக்கு போட்டோவுக்கு போஸ் […]
சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஜூலி சந்திரமுகி வேஷம் போட்டுள்ளார். இன்றைய ப்ரொமோவில் ஜூலியை மீண்டும் டார்கெட் செய்வது போன்று காட்டியுள்ளனர். ஜூலி ப்ரொமோவில் சந்திரமுகி வேஷம்போட்டு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். வீடியோவில் குண்டு ஆர்த்தி, நமீதா உள்ளிட்ட பெண்கள் ஒன்றாக அமர்ந்து ஜூலியை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். நீ கேடின்னா, நான் மகா கேடி என்கிறார் நமீதா.இதனால் கடும் வாக்குவாதம் நடப்பது போல காட்டி உள்ளனர் .இதனால் இன்று நெட்டிசன்களுக்கு திணியாக உள்ளார் ஜுலி இதை […]
சென்னை : 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், வில்லன்கள், காமெடியன்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக பசங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருதை மலையன் திரைப்படத்துக்காக நடிகர் கரணும், சிறந்த நடிகை விருதை பொக்கிஷம் திரைப்படத்துக்காக பத்மப்பிரியாவும், சிறந்த வில்லன் விருதை பிரகாஷ்ராஜும் […]
நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என ஜாதிய வெறியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை திட்டியது பூதாகரமாக வெடித்துள்ளது. சேரி பிஹேவியர் என காயத்ரி ரகுராம் கூறியதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன. பல எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களை இதற்கு தெரிவித்துள்ளனர். காயத்ரி ரகுராமின் தாய் கிரிஜாவும் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். முன்னதாக இந்து மக்கள் கட்சி இந்த நிகழ்ச்சி குறித்து புகார் அளித்துள்ளது. நடிகர் கமல் உள்பட […]
மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள், 4 நாடுகளில் நடைபெற்று வருகின்றன. மகேஷ் பாபு நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘ஸ்பைடர்’. செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகவுள்ள இந்தப் படம், ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் அமைந்துள்ளது. இந்தப் படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இந்தியா மட்டுமின்றி, ஈரான், ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் நடக்கிறது. எனவே, ஒவ்வொரு நாட்டுக்கும் மாறி மாறி பறந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.இந்தப் படத்தில், மகேஷ் பாபு […]
சவூதி அரேபியாவில் உள்ள பள்ளிகளில் படிப்படியாக மாணவிகள் விளையாட்டுகளில் ஈடுபடுவது அறிமுகம் செய்யப்படும் என்றும், அதுவும் ஷரியா மதக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே இருக்கும் என்றும் அந்நாட்டு கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், 4 ஆண்டுகளுக்கு முன்புதான், சவூதி அரேபியாவில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் முதன் முதலாக பங்கேற்றார். சவூதியில் பெண்களுக்கு எதிராக கடுமையான […]
திருவனந்தபுரம்: மொத்த கேரளாவும் நடிகர் திலீப்பை வறுத்தெடுத்துக் கொண்டுள்ள சூழ்நிலையில், சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், அவருக்கு ஆதரவாக பேசி எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் பிக்சிங்கில் ஈடுபட்டவர்தான் ஸ்ரீசாந்த். கேரளாவை சேர்ந்த இவரால் அம்மாநில கிரிக்கெட் உலகத்திற்கே அப்போது தலைகுனிவு ஏற்பட்டது. 2013 முதல் இவர் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன்பிறகு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்ரீசாந்த், கடந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்போது கேரள மாநிலமே […]
திருவனந்தபுரம்: சக நடிகை ஆடை மாற்றுவதை மொட்டை மாடியில் இருந்து தலைகீழாக தொங்கியபடி பார்த்ததாக எழுத்தாளர் ரபீக் சீலட் தெரிவித்துள்ளார். திலீப்பின் இந்த கீழ்த்தரமான செயலின் போது தன்னிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டதை அவர் மறக்கமாட்டார் என்றும் ரபீக் சீலர் கூறியுள்ளார். நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுக்கச் சொன்னதோடு அவரை நிர்வாணமாக வீடியோ எடுக்கவும் கூறியிருந்தார் நடிகர் திலீப். இதில் தொடர்புடைய பல்சர் சுனில் போலீசாரிடம் சிக்கவே தற்போது உண்மைகள் வெளிபட்டு கம்பி எண்ணிக்கொண்டியிருக்கிறார் […]
ஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் ஒரு பரபரப்பு எழுந்து வருகிறது. வந்தநாள் முதல் பலமுறை சர்ச்சைகளில் சிக்கி வருபவர் ஜுலி. ஜுலிக்கு, ஆரவ் மீசை வரைந்தபோது அவரை கண்களை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். இவர் ரஜினி பாட்டுக்கு டான்ஸ் ஆடி முடித்தவுடன், காயத்ரியை தனியாக அழைத்து ஆரவ்வை பார்த்தால் ஏதோ செய்கிறது. பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, எனக்கு பிடித்திருக்கிறது எனவும் கூறியுள்ளார். பின்னர் காயத்ரி இதை மற்றவர்களிடம் கூறி கலாய்த்தார். ஆரவ்வும், ஜுலி ஆரம்பத்தில் கவலையாக இருந்ததால் ஆறுதல் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் “சேரி பிஹேவியர்” என்று காயத்ரி ரகுராம் பேசியதற்காக தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களில் ஒருவர் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம். இவர் தன் சக போட்டியாளரை சேரி பிகேவியர் என ஆத்திரத்துடன் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “காயத்ரி ரகுராம் சேரி வாழ் மக்களை அவமானப்படுத்திவிட்டார்” என்று சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். தவிர இந் நிகழ்ச்சியில் ஆபாசமாக நடிகைகள் […]
நடிகர் சூர்யா உள்பட 8 பேர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு நடிகைகள் மஞ்சுளா, ஸ்ரீப்ரியா, நமீதா உள்ளிட்டோர் குறித்து கூறிய கருத்துகளை கண்டித்து அந்த செய்தியை வெளியிட்ட தினசரி பத்திரிக்கையை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கக் கூட்டத்தில் கண்டன கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர்கள் விவேக், சூர்யா, சத்யராஜ், சரத்குமார், அருண்விஜய், நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட […]
போதைப்பொருள் விற்பனை வழக்கில் நாசா விஞ்ஞானி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தெலுங்கு திரைத்துரையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாசா விண்வெளி ஆய்வுக்கழகத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் அனீஷ். இவர் போதைப் பொருள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து கோகைன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரூத்தூர் அகர்வால் என்பவருடன் விஞ்ஞானி அனீஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெலுங்கு திரை பிரபலங்களுக்கும் இதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. […]