விக்ரம் வேதா’ படத்தைத் தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்தார் மாதவன். தமிழில் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தாலும், எதிலுமே ஒப்பந்தமாகாமல் இருந்தார். நீண்ட நாட்களாக சற்குணம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். தற்போது மாதவன் அப்படத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமாகி இருக்கிறார். முழுக்க வெளிநாடுகளிலும், அடர்ந்த காடுகளுக்குள்ளும் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள். கணேஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தை இயக்குவது மட்டுமன்றி, இணை தயாரிப்பாளராகவும் சற்குணம் பொறுப்பேற்கிறார். இப்படம் காடுகளில் […]
தமிழகத்தைச் சேர்ந்த ‘ஆஸ்கார் நாயகன்’ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வடகிழக்கும் மாநிலமான சிக்கிம்மின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கேங்டாக்கில் நடைபெற்ற ரெட் பாண்டா விண்டர் கார்னிவலின் துவக்கவிழாவில் பேசிய சிக்கிம் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம்மின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சிக்கிம்மிற்கு சுற்றுலா கீதம் உருவாக்கப்போகும் ரஹ்மான், விழாவிற்கு பாரம்பரிமான உடை அணிந்து வந்து, குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஹ்மான், சிக்கிம்மின் […]
மிலந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, சுரேஷ், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவள்’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2017-ம் ஆண்டில் அனைத்து தரப்புக்கும் லாபம் கொடுத்த படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது. இந்நிலையில், டிஜிட்டலில் நெட் ப்ளிக்ஸ் இணையத்தில் இப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருப்பதை சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதற்கு “தமிழ் ராக்கர்ஸ் எப்பவும் எங்களை கைவிட்டதில்லை ப்ரோ” […]
நடிகர் அஜித் தனது சினிமா வாழ்க்கையில் ‘மங்காத்தா’, ‘பில்லா’ போன்ற படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து பெரும் வெற்றியினை பெற்றவர். இந்த நிலையில் சமீபத்தில் ‘வேலைக்காரன்’ படத்தை இயக்கிய மோகன்ராஜா, அஜீத்தின் 59வது படத்தை இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதனை மோகன்ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் “அஜீத்தை இயக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருக்காக ஒரு நெகட்டிவ் ஹீரோ கதையை தயார் செய்ய காத்திருக்கிறேன்” என்று […]
நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘மதுர வீரன்’. ஜல்லிக்கட்டினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், படத்தின் நாயகன் சண்முகபாண்டியன் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதுப்பற்றி விசாரித்த போது, அவர் உடம்பை குறைத்து நடிப்பு பயிற்சி பெற அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்காக ஆண்டுதோறும் கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆஸ்கர் விருதிற்கு இணையாக கருதப்படும் இந்த விருதினை பெறுவது ஹாலிவுட் திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான 75-வது கோல்டன் க்ளோப் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி ஏராளமான ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகர்கள் கருப்பு நிற உடையில் அங்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சிவப்புக் […]
சாமி-2 படமானது சியான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் நடந்தது. இதனையடுத்து தற்போது நெல்லையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சர்ச்சைகள் குறித்து இயக்குனர் ஹரி பேசியுள்ளார். அப்போது அவர், “சாமி-2 படத்தில் கீர்த்தி, த்ரிஷா இருவருமே நடிக்கின்றனர், த்ரிஷா இல்லை என்பது வதந்தி மட்டுமே. மேலும், படத்தில் 5 சண்டைக்காட்சிகள் உள்ளது, அதில் 2 சேஸிங் காட்சிகள், 5 பாடல்கள் படத்தில் […]
‘வீரம்’ ‘வேதாளம்’ ‘விவேகம்’ படங்களை தொடர்ந்து தல அஜித்குமாரும், இயக்குனர் சிவாவும் இணைந்திருக்கும் படம் ‘விஸ்வாசம்’. கடைசியாக இவர்கள் கூட்டணியில் வெளிவந்த விவேகம் மக்களிடம் வரவேற்ப்பை பெற தவறிவிட்டது. ஆதலால் இப்படத்தை எப்படியும் ஹிட்டாக்க இயக்குனர் கடுமையாக போராடி வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக இருந்தது. பின்னர் இச்செய்தி மறுக்கப்பட்டது. பிறகு விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் இதுவும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது புது […]
மலேசியாவில் கோலாகலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் எல்லோரும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு வந்த 130 பிரபலங்கள் அவமானப்படுத்தப்பட்டு விமான நிலையம் வந்தும், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்நிகழ்ச்சி நடிகை ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று ஏற்கெனவே தகவல் வந்தது. அதோடு நேற்று எஸ்.வி. சேகரும் தனது டிவிட்டர் பக்கத்தில் “விஜயகாந்த் நடிகர் […]
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து இப்போது விஜய் அஜித் திரை மார்கெட்டை தொட நெருங்கி கொண்டிருக்கிறார் நடிகர் சிவகர்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்டுகொண்டிருக்கும் திரைப்படம் வேலைக்காரன். இப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாது திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமே சுமார் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சிங்கம் 3 ஆம் பாகத்தின் வசூலை இப்படம் முறியடித்துள்ளது. விவேகம் திரைப்படம் தமிழகத்தில் […]
அண்மையில் சித்தார்த் தயாரித்து நடித்த “அவள்” படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை இணையத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதில் அவர், “திரையரங்கில் பார்க்காமல் விட்டவங்க இந்த தளத்தில் பாருங்க” என்று கூறியிருந்தார். அதற்கு ஒரு ரசிகர் “தமிழ்ராக்கர்ஸ் எப்பவும் எங்களை கைவிட்டது இல்ல” என்று பதிலுக்கு ட்விட் செய்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சித்தார்த், “உங்க மூஞ்சியெல்லாம் எங்க படம் காசு […]
நட்சத்திர விழாவையும் தாண்டி பிஸியாக இருப்பர் நடிகர் சூர்யா. இவர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.அதற்கான புரொமோஷன் வேலைகளில் சூர்யா மிகவும் பிஸியாக இருக்கிறார். நேற்று மலேசியாவில் இருந்த சூர்யா தற்போது இன்று காலை முதல் ஹைதராபாத்தில் தெலுங்கு கேங் படத்திற்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார்.அப்போது ஒரு பேட்டியில் தன்னுடைய அடுத்த படத்தை கே.வி. ஆனந்த் அவர்கள் தான் இயக்க இருப்பதாக கூறியுள்ளார். அயன், மாற்றான் படங்களுக்கு பிறகு இவர்கள் இணையும் மூன்றாவது படம் இது.இப்படத்தை […]
இவரது பிறந்த நாள் கடந்த 5ஆம் தேதி மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டது .இவர் பிறந்த நாளையொட்டி சௌதி அரேபியாவில் அவருக்கு பரிசாக அடிக்குழாய் அன்பளிப்பாக ஒரு கிராமத்திற்கு வழக்கப்பட்டது.தீபிகா ரசிகர் மன்றம் சார்பாக இது அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மேலும் கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனர் .. தீபிகா படுகோனே உஜாலா மற்றும் பிரகாஷ் படுக்கோன் ஆகியோருக்கு ஜனவரி 5, 1986-ல் டென்மார்க்கில் உள்ள கொபஹன்ஹனில் பிறந்தார். இவர் வெறும் பதினொரு மாத வயதாக இருக்கும் போது இவர் குடும்பம் இந்தியாவில் […]
இந்திய சினிமாவில் சியான் விக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுப்பவர். இவர் நடிப்பில் இந்த வாரம் “ஸ்கெட்ச்” படம் திரைக்கு வரவுள்ளது.இதை தொடர்ந்து துருவ நட்சத்திரம், சாமி2 என பிஸியாக இருக்கும் இவர் ராவணன் படத்திற்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் நடிக்க உள்ளார்.இப்படத்தை ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கவுள்ளார், படத்திற்கு “மஹாவீர் கர்ணா” என்று தலைப்பு வைத்துள்ளனர். கண்டிப்பாக இப்படம் சரித்திரக்கதையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் ஒரு கட்டடம் கட்டப்பட இருக்கிறது. அதற்காக பணம் சேகரிக்கும் முயற்சியில் நடிகர் சங்கம் குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தற்போது நட்சத்திர கலைவிழா மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் ரஜினி, கமல், சூர்யா, விஷால் என பல நடிகர்கள், நடிகைகள் பங்குபெற்றுள்ளனர்.இந்த நிலையில் நடிகர் சங்கத்திற்கு சரவணா ஸ்டோர்ஸ் சார்பாக ரூ. 2.5 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.நடிகர்களை தாண்டி இந்த நிகழ்ச்சியில் அவரும் பங்குபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா ரசிகர்கள் சிங்கம் படத்திற்கு பிறகு நீண்ட நாள் காத்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படம் பல பிரச்சனைகளுக்கு இடையே தயாராகி வந்தது.தற்போது படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து இவ்வருட பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படம் இதுவரை ரூ. 85 கோடிக்கு விலைபோயுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமா இருக்கும் நிலையில் படமும் பிரம்மாண்ட தொகைக்கு விலைபோகியிருப்பது படக்குழுவை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினியும், கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர்.இதனால் மலேசியா விழாக்கோலம் பூண்டுள்ளது… அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் உங்களுக்காக:
நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினி கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர். இந்த நிலையில் இந்திய மக்கள் மன்றம் என்னும் அமைப்பின் தலைவரும் நடிகருமான வாராகி இந்நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவாக பரப்புங்கள் மதுரை ரசிகர்களே..! நாளை 7-1-2018 மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகில் காலை 10 மணியளவில் நம் உலகநாயகன் கமல்ஹாசன் எதிர்க்கும் தமிழக ஊழல் அரசியல் பெருச்சாளிகளை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,மாவட்ட தலைவர் வழக்கறிஞர் திரு,ம.அழகர் தலைமையில் நடைபெறுகிறது என கமலின் ரசிகர்கள் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தற்போதுள்ள டிவி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களுள் மிக பிரபலமானவர் ‘நீயா நானா’ கோபிநாத். இவர் நடத்தும் நிகழ்ச்சியும் சரி, பேட்டிகளும் சரி கவனிக்கத்தக்க வகையில் இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவர் புத்தகங்களும் எழுதி வருகிறார். அண்மையில் தான் எழுதிய ஒரு புத்தகத்திற்கு பெயர் என்ன வைக்கலாம் என்று ரசிகர்களிடம் கேட்டு டுவிட்டரில் ஒரு கருத்துக் கணிப்பும் நடத்தினார். அதில் ரசிகர்கள் அதிகமானோர் தேர்வு செய்த பெயரை நடிகர் சூர்யா அவர்கள் வரும் 8ம் […]