கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவரது உருவப்படத்தை எரித்து 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக புகார் எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பபட்டுள்ளது. இந்நிலையில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் […]
மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் படம் முழுக்க வரும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.விஜய் சேதுபதி – சிம்பு மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, ஃபஹத் பாசில், விஜய்சேதுபதி, சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் […]
மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் மூத்த கலைஞர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்கப்படவில்லை என்று எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியதற்கு நடிகர் விஷால் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் மலேசியாவில் இருந்து நேற்று இரவு சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், “எஸ்.வி.சேகர் அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்ததற்கு ஒரு காரணம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாது. கலை விழாவில் மூத்த கலைஞர்கள் அனைவரையும் அழைத்து உரிய […]
பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதியினை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி, வரும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு 9ம் தேதி வெளியாகவுள்ளதாம். பி-ஸ்டூடியோஸ் மூலம் பாலாவே தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் விரையில் வெளியாகும் என்றும் செய்திகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ப்ரோமோஷனிருக்காக கொச்சி சென்ற சூர்யா அங்கு கல்லூரி மாணவர்களோடு நடனமாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தினை ‘கிறீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசைமையமைத்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் சூர்யா கொச்சியிலுள்ள கல்லூரியின் மாணவர்களோடு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ பதிவு https://youtu.be/_rdB5RM4vnM
‘காற்று வெளியிடை’ படத்திற்கு அடுத்து மணிரத்னம் தனது அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் பல பிரபலங்களுள் விஜய் சேதுபதிக்கு மட்டும் அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான, சிறிய கதபாத்திரத்திற்கு தான் மணிரத்னம் கதை எழுதினாராம். ஆனால் தற்போது விஜய் சேதுபதியின் கதபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இயக்குநர் நீட்டித்திருப்பதாக கூறப்படுகிறது.மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் […]
நடிகை அமலா பால் தமிழிலும், மலையாத்திலும் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவர் மீது போலி முகவரி கொடுத்து விலையுயர்ந்த வாகன பதிவு செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் தனது காரை புதுச்சேரியில் வாகன பதிவு செய்யும் போது கொடுக்கப்பட்ட ஆவணங்கள் போலி என்றும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு வரும் ஜனவரி 15ஆம் தேதி கொச்சி உயர் நீதிமன்றத்தில் நடைபெறும். அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை குற்றவியல் பிரிவு அமலா பாலை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தில் ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் படத்தில் சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, நீலிமா ராணி, ‘பிக் பாஸ்’ ஜூலி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை அரசு பிலிம்ஸ் சார்பில் விமலே தயாரித்துள்ளார். […]
இன்று பழம் பெரும் நடிகரும் நாடகக் கலைஞரும் ஆன ஆர். எஸ் மனோஹரின் நினைவு நாள். (10.1.2006) இராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு தமிழ்நாடு, நாமக்கலில் சுப்ரமணிய ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும். இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவராவார். தமிழ் நாடகக் கலைக்கு தனிப்பெருமைசேர்க்கும் வகையில் பிரமாண்டமான […]
‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு ‘விசுவாசம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இயக்குநர் சிவா – யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகவே யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது. மீண்டும் அனிருத் தான் என்று தகவல்கள் வெளியானாலும், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், ‘விக்ரம் வேதா’ […]
திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரிடம் நிரூபர்கள் ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பு, கமலின் ட்விட்டர் பதிவுகள் குறித்து கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு அவர் கூறுகையில், “இருவரும் எனது நண்பர்கள், மேலும் இருவரும் எனது இரண்டு கண்கள் போன்றவர்கள். அவர்களை பற்றி கருத்து கூற அவகாசமான காலம் இல்லை. இன்னும் காலம் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா வெகு நாட்களாக நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தினை முடித்த சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனது அடுத்த படத்தினை நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பின்னர், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா, அதற்கடுத்து மீண்டும் 24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமாருடன் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்பது […]
நடிகை ஹன்சிகா முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தாலும், சமீப காலமாக அவர்களுக்கு நல்ல படங்கள் அமையவில்லை. இந்நிலையில் இவர் பிரபுதேவாவுடன் நடித்த ‘குலேபகாவலி’ படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஹன்சிகா தற்போது சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதனை அடுத்து இவர் விக்ரம் பிரபு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு […]
விக்ரம் வேதா’ படத்தைத் தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்தார் மாதவன். தமிழில் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தாலும், எதிலுமே ஒப்பந்தமாகாமல் இருந்தார். நீண்ட நாட்களாக சற்குணம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். தற்போது மாதவன் அப்படத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமாகி இருக்கிறார். முழுக்க வெளிநாடுகளிலும், அடர்ந்த காடுகளுக்குள்ளும் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள். கணேஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தை இயக்குவது மட்டுமன்றி, இணை தயாரிப்பாளராகவும் சற்குணம் பொறுப்பேற்கிறார். இப்படம் காடுகளில் […]
தமிழகத்தைச் சேர்ந்த ‘ஆஸ்கார் நாயகன்’ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வடகிழக்கும் மாநிலமான சிக்கிம்மின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கேங்டாக்கில் நடைபெற்ற ரெட் பாண்டா விண்டர் கார்னிவலின் துவக்கவிழாவில் பேசிய சிக்கிம் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம்மின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சிக்கிம்மிற்கு சுற்றுலா கீதம் உருவாக்கப்போகும் ரஹ்மான், விழாவிற்கு பாரம்பரிமான உடை அணிந்து வந்து, குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஹ்மான், சிக்கிம்மின் […]
மிலந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, சுரேஷ், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவள்’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2017-ம் ஆண்டில் அனைத்து தரப்புக்கும் லாபம் கொடுத்த படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது. இந்நிலையில், டிஜிட்டலில் நெட் ப்ளிக்ஸ் இணையத்தில் இப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருப்பதை சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதற்கு “தமிழ் ராக்கர்ஸ் எப்பவும் எங்களை கைவிட்டதில்லை ப்ரோ” […]
நடிகர் அஜித் தனது சினிமா வாழ்க்கையில் ‘மங்காத்தா’, ‘பில்லா’ போன்ற படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து பெரும் வெற்றியினை பெற்றவர். இந்த நிலையில் சமீபத்தில் ‘வேலைக்காரன்’ படத்தை இயக்கிய மோகன்ராஜா, அஜீத்தின் 59வது படத்தை இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதனை மோகன்ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் “அஜீத்தை இயக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருக்காக ஒரு நெகட்டிவ் ஹீரோ கதையை தயார் செய்ய காத்திருக்கிறேன்” என்று […]
நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘மதுர வீரன்’. ஜல்லிக்கட்டினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், படத்தின் நாயகன் சண்முகபாண்டியன் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதுப்பற்றி விசாரித்த போது, அவர் உடம்பை குறைத்து நடிப்பு பயிற்சி பெற அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்காக ஆண்டுதோறும் கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆஸ்கர் விருதிற்கு இணையாக கருதப்படும் இந்த விருதினை பெறுவது ஹாலிவுட் திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான 75-வது கோல்டன் க்ளோப் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி ஏராளமான ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகர்கள் கருப்பு நிற உடையில் அங்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சிவப்புக் […]
சாமி-2 படமானது சியான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் நடந்தது. இதனையடுத்து தற்போது நெல்லையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சர்ச்சைகள் குறித்து இயக்குனர் ஹரி பேசியுள்ளார். அப்போது அவர், “சாமி-2 படத்தில் கீர்த்தி, த்ரிஷா இருவருமே நடிக்கின்றனர், த்ரிஷா இல்லை என்பது வதந்தி மட்டுமே. மேலும், படத்தில் 5 சண்டைக்காட்சிகள் உள்ளது, அதில் 2 சேஸிங் காட்சிகள், 5 பாடல்கள் படத்தில் […]