பல பிரச்சினைகளுக்கு பிறகு வெளியான திரைப்படம். ஆனால் படத்தில் இந்து அமைப்புகள் சொன்ன கருத்து எதுவும் இல்லை. ராஜபுத்திரர்களை உயர்வாகவும், வீரமாகவும் தான் காட்டியுள்ளனர். பத்மாவதி கதாபாத்திரம் இறுதிவரை கண்ணியமாக இருக்கிறது. அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரமாக ரன்வீர்சிங் சிறப்பாக நடித்திருக்கிறார். பதவி வெறி, காம வெறி, எதையும் வெற்றி கொள்ள எதையும் செய்பவர். மிகவும் மோசமான மன்னன். ஒரு காட்சியில் பத்மாவதி கூறுவாள், அலாவுதீன் கில்ஜி அரசனல்ல, அரக்கன் என்பாள். பத்மாவதியாக தீபிகா படுகோன் நேர்த்தியாக […]
இப்படம் வெளியாகும் முன்பே பல இணையதள சாதனைகள் செய்து வந்த ‘மெர்சல்’ படம் 2017 இறுதியில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக பல சிறப்புகள் இப்படத்திற்கு அமைந்தது. இதில் ஆளப்போறான் தமிழ்ன் பாடல் மிக முக்கியமானது. தற்போது மீண்டும் ஒரு பெருமை இப்படத்திற்கு கிடைத்துள்ளது. நார்வே நாட்டில் நடந்து வரும் தமிழ் படங்களுக்கான திரைவிழாவில் விருதுகள் கிடைத்துள்ளது. அதன் படி, மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக பாடலாசிரியர் விவேக்கிற்கு விருது கிடைத்துள்ளது. மேலும் நீதானே பாடலுக்காக ஸ்ரேயா […]
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி-62’ படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் விஜய் 62வது படம் பற்றி பேசும்போது, “முருகதாஸ் படத்தில் எப்போதும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும், மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் கதையாக இருக்கும். இப்படமும் அப்படி ஒரு பிரச்சனை ஒரு பெரிய நடிகரை வைத்து பேசப்படுகிறது” என்று கூறியுள்ளார். அந்த நடிகர் யார் என்பது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எம்.சார்ஜும் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் தனது அம்மாவிற்காக அளிக்கும் குறும்படம் ‘மா’. இப்படம் வயது பருவத்தில் இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. போராட்டங்கள், உலக கவர்ச்சிகள் என பல தடைகளுக்கு நடுவே பருவம் வந்த ஆண், பெண் ஒரு சிக்கலில் மாட்டி பின் அதை எப்படி அந்த பெண்ணின் தாய் சமாளிக்கிறாள். சமூகத்திற்கு என்ன சொல்கிறாள்..? என ‘மா’ சொல்கிறது. இதோ அந்த குறும்படம் https://www.youtube.com/watch?v=-lKk_5qYdkk
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்துக்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனியே இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும், விஜய் ஆண்டனியின் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி ரிலீஸாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் வியாபாரம் செய்யும் தமிழக அரசை திருடன் என்றும், “மது வியாபாரம் செய்வதற்கு அரசு என்று ஒன்று தேவையில்லை” என்றும் தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இடையே கமல்ஹாசன் பேசியுள்ளார். மேலும் தரமான கல்வி, குடிநீர் வசதி செய்து தருவதே அரசின் கடமைகள். சாதியாலும் மதத்தாலும் பிரிவினை ஏற்படுத்துவது தவறு என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “சமூக மாற்றத்தை மாணவர்களால் தான் கொண்டு வரமுடியும். நாட்டு நடப்புகளை மாணவர்கள் தெரிந்து […]
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் மீது பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் ஒரு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம் இதுகுறித்து கேட்டபோது, “தமிழ்த்தாய் வாழ்த்து ஓலித்தபோது எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அரசியல் பிரமுகரின் குடும்ப வாரிசு என்பது அனைவருக்கும் தெரியும். இதுவரை நடிகராக மட்டும் இருந்துவந்த அவர், சமீப காலமாக அரசியல் கருத்துக்களை நேரடியாகவே தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இன்று ஸ்டாலின் தலைமையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட உதயநிதி “மேடையில் இருப்பதை விட மக்களுடன் இருக்கவே விரும்புகிறேன். இனி என்னை அடிக்கடி மேடையில் திமுக தொண்டர்கள் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
‘ஆக்க்ஷன் கிங்’அர்ஜுன் இயக்கி, சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் ‘சொல்லிவிடவா’. இப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் என்பவர் இசையமைத்துள்ளார். ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ட்ரைலர் உங்கள் பார்வைக்காக https://www.youtube.com/watch?time_continue=1&v=SZ6VZgUGsPc https://www.youtube.com/watch?time_continue=1&v=SZ6VZgUGsPc
விக்ரம் வேதாவில் கடைசியாக நடித்த ஆர்.மாதவன் தனது ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார். ஆனால் இந்த நேரத்தில் சிறிய திரை.அமேசான் பிரைமின் எஸ்க்க்ளுசிவ் தொடர் ‘ப்ரீத்’. இதில் முன்னணி நடிகர்களான மாதவன் மற்றும் அமித் சத் நடித்த 8 பாகங்களை கொண்ட தொடர். டேனி (மாதவன்) அவரது 6 வயதான நோய்வாய்ப்பட்ட மகனை இழக்கும் நிலையில் உள்ளார். மகனுக்கான நுரையீரல் வழங்குபவரை தேடவுள்ளார். துரதஷ்டவசமாக கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். காவல் அதிகாரி கபீர் சாவந்த் (அமித் சாத்) […]
காமெடி படங்களில் மட்டும் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் மனிதன், இப்படை வெல்லும் என்று தீவிர கதைக்களம் உள்ள படங்களில் நடித்தார். இப்பொழுது ஒரு வேறுபட்ட நடிப்பை காட்டும் கதையை தேர்ந்தெடுத்துள்ளார். மலையாள சினிமாவில் பிரமாண்ட வெற்றியை பெற்ற படம் ‘மகேஷண்டே பிரதிகாரம்’.இதன் தமிழ் ரீமேக் தான் நிமிர்.நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில், ஃபோட்டோ ஸ்டுடியோ நடத்தி வரும் இளைஞன் செல்வம் (உதயநிதி ஸ்டாலின்). யார் வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் சராசரி மனிதனான செல்வம், […]
அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா புதிய சைக்கோ த்ரில்லர் படத்தை நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அறிவழகன் அவர்கள் ‘குற்றம் 23’ படத்தை இயக்கியவர். அதை அடுத்து அவர் நயன்தாரா நடிப்பில் ஒரு படம் இயக்கப்போவதாக கூறியிருந்தார். மேலும் தற்போது நயன்தாராவிற்காக ஒரு புதிய சைக்கோ த்ரில்லர் கதையை உருவாகிவுள்ளதாக கூறியுள்ளார்.
இசைஞானி இளையராஜா பத்ம விபூஷண் விருதை பெற்ற நிலையில் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா அண்மையில் ட்விட்டர் பக்கத்தில் அவர்களது புதிய படத்தை பற்றி பதிவு செய்துள்ளார். அதில் இளையராஜா , யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் சேர்ந்து முதல் முறையாக இசையமைக்க போவதாக கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் பெயர் ‘மாமனிதன்’ என்றும் இதை வை.எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இப்படத்தின் ஹீரோவாக விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர் […]
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் விருது விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி வழங்கினார்.ஸ்ரீதேவியிடம் இருந்து விருதை பெற்ற கமல் அவர் கட்டியணைத்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். பின்னர் பேசிய கமல், “ஸ்ரீதேவியிடம் இருந்து வாங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மலரும் நினைவுகள் வருகின்றது”, என்று கூறியுள்ளார்.
நடிகர் ஜெய்யின் நடிப்பில் சமீபத்தில் பலூன் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து பார்ட்டி, கலகலப்பு 2 போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. அதன் பின்பு, அவர் ஷியாம் மற்றும் பிரவீன் இயக்கும் மாங்கல்யம் தந்துனானே படத்தில் நடிக்க போகிறார். இதில் அவருக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்கவுள்ளாராம். மேலும் இந்த படத்தில் இசையமைக்க ஷான் ரஹ்மான் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இளைஞர்களிடம் பட்டய கிளப்பிய ஜிமிக்கி கம்மல் பாடலை இசையமைத்தவர் […]
குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2018-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசு 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது. பத்மஸ்ரீ விருது வென்றவர்களின் பட்டியல் இதோ: 1.மருத்துவர் எம்.ஆர்,. ராஜகோபால் 2.நாகசாமி 3.ஞானம்பாள் 4.தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜபோபால வாசுதேவன் 5.விஞ்ஞானி அரவிந்த குப்தா 6.இயற்கை மருத்துவர் லெட்சுமி குட்டி 7.ஓவியர் பாஜூஷியாம் 8.சமூக ஆர்வலர் சுதான்சுபிஸ்வாஸ் 9.நாட்டுப்புற பாடகி […]
கமல் தனது அரசியல் பயணத்தை துவங்கும் பணிகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று செய்துயாளர்களை சந்தித்த இவரிடம், ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், ‘ஆன்மிக அரசியல் சாத்தியப்படுமா என எனக்கு தெரியவில்லை. மக்கள் நலன்தான் முக்கியம்’ என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் விஜயேந்திரர் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், “கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது, சில பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது, செய்துதான் காட்ட முடியும். தியானத்தில் […]
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தில் ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கணேசன் நடிகர் விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, “ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் ‘மன்னர் வகையறா’ என்ற பெயரில் புதிய படம் தயாரித்துள்ளோம். அந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விமல் நடித்துள்ளார். குடியரசு தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிப்பு […]
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘விசுவாசம்’ படம் குறித்த சில தகவல்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தற்போது வெளியிட்டுள்ளார். அதன் படி அவர் கூறியது யாதெனில், “கடைசி 3 மாதங்கள் படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் தான் இருந்தோம், தற்போதும் அந்த வேலை தான் தொடர்கின்றது” என்றும், அந்த பணிகள் முடிந்த பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, அப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்” என்றும் கூறியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு அடுத்த […]
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த மெர்சல் படம் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றது. பல சர்ச்சைகளில் சிக்கினாலும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில், இப்படம் 100வது நாளினை எட்டியுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து, இந்த படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஹேமா ருக்மணி ட்விட்டரில் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதோ அவருடைய […]