ஒருவழியாக பத்மாவத் படத்தை எதிர்த்த போராட்டம் வாபஸ்!
கர்னிசேனா அமைப்பு ராஜபுத்திரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பெருமைப்படுத்துவதால் பத்மாவத் படத்தை எதிர்க்கும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
பத்மாவத் படக்குழுவினர் அழைப்பின் பேரில் கர்னிசேனா அமைப்பைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், மும்பையில் பத்மாவத் படத்தைப் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து கர்னிசேனா அமைப்பின் மும்பை தலைவர் சுக்தேவ் சிங் கோகமதி கூறுகையில், பத்மாவத், ரஜபுத்திரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பெருமைப்படுத்துவதாக கூறியுள்ளார்.
டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மற்றும் ராணி பத்மாவதி இடையே ரஜபுத்திரர்கள் மனதைப் புண்படுத்தும் படியான எந்த ஒரு ஆட்சேபணைக்குரிய காட்சியும் படத்தில் இல்லை எனத் தெரிவித்த அவர், பத்மாவத் படத்தை எதிர்த்த போராட்டத்தை கர்னிசேனா வாபஸ் பெறுவதாகக் கூறினார். இந்தப் படத்தை இடையூறின்றித் திரையிட உதவி செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.