அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது! குவிந்த அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்கள்!
அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும்.
இந்த சூழலில், இந்த ஆண்டுக்கான (2025) 139 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில், அஜித்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நடிகர்களில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் இதற்கு முன்பு பத்ம பூஷண் விருது பெற்றுள்ளனர். அவர்களை தொடர்ந்து அஜித்குமார் இந்த முறை பத்ம பூஷண் விருது வென்றுள்ளார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அண்ணாமலை
தமிழ் மற்றும் இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற நடிகர்களில் ஒருவரான, திரு. அஜித் குமார் அவர்கள், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது பெற்றமைக்கு,
தமிழ்நாடு பாஜக சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிமையான பின்னணியில் இருந்து, தனது மன உறுதியாலும், கடின உழைப்பாலும், பல துறைகளில் சாதனை படைத்து, கோடிக்கணக்கான இதயங்களில் அழியாத முத்திரையைப் பதித்துள்ள நமது ‘நாயகனை’ அங்கீகரித்ததற்காக, நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு, தமிழக மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என அண்ணாமலை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற நடிகர்களில் ஒருவரான, திரு. அஜித் குமார் அவர்கள், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது பெற்றமைக்கு, @BJP4TamilNadu சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிமையான பின்னணியில் இருந்து, தனது மன உறுதியாலும்,… pic.twitter.com/4eWlUdMjTY
— K.Annamalai (@annamalai_k) January 25, 2025
கனிமொழி
தமிழ்நாட்டிலிருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் திரு. அஜித்குமார், திரு. நல்லி குப்புசாமி செட்டியார், திருமிகு. ஷோபனா சந்திரகுமார் மற்றும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு. குருவாயூர் துரை, திரு. தாமோதரன், திரு. லக்ஷ்மிபதி ராமசுப்பையர், திரு. எ.டி. ஸ்ரீனிவாஸ், திரு. புரிசை கண்ணப்ப சம்பந்தன், திரு. ஆர்.ஜி. சந்திரமோகன், திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, திரு. சீனி விஸ்வநாதன், திரு. வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டிலிருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் திரு. அஜீத்குமார், திரு. நல்லி குப்புசாமி செட்டியார், திருமிகு. ஷோபனா சந்திரகுமார் மற்றும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு. @ashwinravi99, திரு. குருவாயூர் துரை, திரு. தாமோதரன், திரு. லக்ஷ்மிபதி…
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 25, 2025
டிடிவி தினகரன்
பத்மபூஷன் விருதுக்கு தேர்வாகியிருக்கும் நடிகர் திரு.அஜித்குமார், தொழிலதிபர் திரு.நல்லி குப்புசாமி செட்டி, நடன கலைஞர் திருமதி. ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்மபூஷன் விருதுக்கு தேர்வாகியிருக்கும் நடிகர் திரு.அஜித்குமார், தொழிலதிபர் திரு.நல்லி குப்புசாமி செட்டி, நடன கலைஞர் திருமதி. ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளின் கீழ் தேர்வாகியிருக்கும்…
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 25, 2025
அன்புமணி ராமதாஸ்
தினமலர் லட்சுமிபதி, நல்லி குப்புசாமி செட்டியார், நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின் உள்ளிட்ட
தமிழகத்தின் 13 பேர் பத்ம விருதுகள் வென்றிருப்பது மகிழ்ச்சி! பத்ம விருது பெற்ற அனைவரும் தங்களின் துறைகளில் மேலும் மேலும் சாதனை படைக்கவும், இன்னும் உயரிய விருதுகளை வெல்லவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தினமலர் லட்சுமிபதி, நல்லி குப்புசாமி செட்டியார்,
நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின் உள்ளிட்ட
தமிழகத்தின் 13 பேர் பத்ம விருதுகள் வென்றிருப்பது மகிழ்ச்சி!2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங்…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 25, 2025
உதயநிதி ஸ்டாலின்
ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதுக்கு நடிகர் அஜித் சார், தொழில் அதிபர் திரு.நல்லி குப்புசாமி மற்றும் திருமிகு.ஷோபனா சந்திரகுமார் ஆகியோர் தேர்வாகி இருப்பது அறிந்து மகிழ்ந்தோம்.பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளோர், அவரவர் துறைகளில் மென்மேலும் சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமைத்தேடித் தர வாழ்த்துகிறோம்.
ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதுக்கு நடிகர் அஜித் சார், தொழில் அதிபர் திரு.நல்லி குப்புசாமி மற்றும் திருமிகு.ஷோபனா சந்திரகுமார் ஆகியோர் தேர்வாகி இருப்பது அறிந்து மகிழ்ந்தோம்.
அதேபோல, பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர் சகோதரர் @ashwinravi99,…
— Udhay (@Udhaystalin) January 25, 2025