அஜித் எனக்காக இத கண்டிப்பா செய்யணும் போனிகபூர்
அஜித் கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாட பட்டு வரும் நடிகர்.
அஜித் கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாட பட்டு வரும் நடிகர்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் சாதனை படைத்த படம் “விஸ்வாசம்”. இந்த படம் பல குடும்ப ஆடியன்ஸ்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இவர் இந்த படத்தை தொடர்ந்து தற்போது மிகவும் விறு விறுப்பாக “நேர்கொண்ட பார்வை” எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் பல முக்கிய பிரபலங்களையும் சந்தித்து வந்தார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்த நிலையில் இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் பார்த்து விட்டு ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவரை தல அஜித் “நேர்கொண்டபார்வை” படத்தில் நடிப்பில் அசத்தி உள்ளார். மேலும் அவர் எனக்காக ஒரு ஹிந்தி படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று அவரது ட்விட்டரில் கூறியுள்ளார்.