படம் வெளியான முதல் நாளே பட்டய கிளப்பும் சாமி-2 :
சாமி-2 விக்ரம் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம். இப்படம் பர்ஸ்ட் லுக் வந்ததில் இருந்து ட்ரோல் செய்யும் ஒரு விஷயமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது படம் வெளியாகியும் ஒரு தரப்பினர் இந்த படத்திற்கு கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் தான் கொடுத்து வருகின்றனர்.
ஆனால், அனைத்து விமர்சனங்களையும் முறியசித்து நேற்று இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ.5 கோடிகளுக்கு மேல் வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
சாமி-2 மேலும் சென்னையில் ரூ 64 லட்சம் வரை முதல் நாள் வசூல் செய்துள்ளது, சமீபத்தில் விக்ரம் படங்களில் இது தான் அதிக வசூல் என கூறப்படுகின்றது.