பா.ரஞ்சித் தற்போது இயக்கி வரும் நட்சத்திரங்கள் நகர்கின்றன திரைப்படமானது தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய கதைக்களம் என கூறப்படுகிறது.
தனது கருத்துக்களை எந்தவித சமரசமும் இல்லாமல் படத்தில் புகுத்தி அதில் வெற்றிகளையும் கண்டவர் இயக்குனர் பா.ரஞ்சித். மெட்ராஸ், கபாலி, காலா என இவர் பேசிய அரசியல் சினிமாவை தாண்டி அரசியல் களம் வரை பிரதிபலிக்கிறது.
கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரங்கள் நகர்கின்றன எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் பா ரஞ்சித், LGBT எனப்படும் தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய கதையம்சம் கொண்டதாம். இன்னும் இந்த விஷயம் பற்றி தமிழகத்தில் வெளிப்படையான பேச்சுக்கள் இல்லை. தற்போது பா ரஞ்சித் போன்ற இயக்குனர் இதனை கையில் எடுத்து படமாக்குவது உண்மையானால் அதுவும் தமிழகத்தில் பேசுபொருளாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…