கொலமாஸ் அப்டேட்.! உண்மை சம்பவத்தின் அடிப்படையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உலகநாயகன்.!
உலகநாயகன் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாக உள்ளதாம். சார்பட்டா போல உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இப்படம் உருவாக உள்ளதாம்.
சென்னையில், அந்தக்காலத்தில் இருந்த குத்துசண்டை கலாச்சாரத்தையும், அந்த பரம்பரை குத்துச்சண்டை வரலாறையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தை மிகவும் உயிரோட்டமாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி இருந்தார்.
இந்த படம் வெளியான பிறகு பலரது பாராட்டுகளை பெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை கூப்பிட்டு பாராட்டினார். அதன் பிறகு, பா.ரஞ்சித்தும் உலகநாயகனும் இணைந்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டனர்.
சில தினங்களுக்கு முன்னர் உலகநாயகன் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது என செய்திகள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இன்னோர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படமும் சார்பட்டா போல உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக உள்ளதாம்.
விரைவில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.