லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 -ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், படத்திற்கான டிரைலர் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தது. வழக்கமாக ஒரு படத்தின் டிரைலர் வெளியானால் தான் நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள். ஆனால், லியோ படத்தின் டிரைலர் வெளியாவதாக போஸ்டரை பார்த்தவுடனே கலாய்த்து வருகிறார்கள்.
ஏனென்றால், போஸ்டரில் நடிகர் விஜய் ஹைனா (கழுதைப்புலி) உடன் முரட்டு தனமாக சண்டைபோட்டுவது போல இடம்பெற்று இருந்தது. இந்த போஸ்டரை பார்த்த பலரும் கண்டிப்பாக புலி 2 தான் லியோ என்றும் நம்ம மைண்ட் அங்க போகுதே என புலி படத்தில் நடிகர் விஜய் கரும் சிறுத்தை உடன் சண்டை போடும் காட்சியை எடுத்து வெளியீட்டு கலாய்த்து வருகிறார்கள்.
விஜய் நடித்த புலி திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது . இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் குழந்தைகளுக்கு பிடிக்கும் படி எடுக்கப்பட்டு இருந்த காரணத்தால் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. படத்தில் ஹன்சிகாவை கரும் சிறுத்தை தாக்க வரும் அந்த சிறுத்தையுடன் மோதி விஜய் ஹன்சிகாவை காப்பாறுவார்.
இந்த காட்சிகள் அந்த சமயத்தில் இருந்தே பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. எனவே அதே போலவே லியோ படத்திலும் காட்சி இருப்பதால் அதுவும் சொதப்பி விடுமோ என பங்கமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இருப்பினும் படத்தை விக்ரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் இயக்குவதால் அந்த காட்சி வேற லெவலில் இருக்க போகுது என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…