நம்ம மைண்ட் அங்க போகுதே! புலி 2 தான் ‘லியோ’பங்கமகாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

leo vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 -ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், படத்திற்கான டிரைலர் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தது. வழக்கமாக ஒரு படத்தின் டிரைலர் வெளியானால் தான் நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள். ஆனால், லியோ படத்தின் டிரைலர் வெளியாவதாக போஸ்டரை பார்த்தவுடனே கலாய்த்து வருகிறார்கள்.

ஏனென்றால், போஸ்டரில் நடிகர் விஜய் ஹைனா (கழுதைப்புலி)  உடன் முரட்டு தனமாக சண்டைபோட்டுவது போல இடம்பெற்று இருந்தது. இந்த போஸ்டரை பார்த்த பலரும் கண்டிப்பாக புலி 2 தான் லியோ என்றும் நம்ம மைண்ட் அங்க போகுதே என புலி படத்தில் நடிகர் விஜய் கரும் சிறுத்தை உடன் சண்டை போடும் காட்சியை எடுத்து வெளியீட்டு கலாய்த்து வருகிறார்கள்.

விஜய் நடித்த புலி திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது . இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் குழந்தைகளுக்கு பிடிக்கும் படி எடுக்கப்பட்டு இருந்த காரணத்தால் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. படத்தில் ஹன்சிகாவை கரும் சிறுத்தை தாக்க வரும் அந்த சிறுத்தையுடன் மோதி விஜய் ஹன்சிகாவை காப்பாறுவார்.

இந்த காட்சிகள் அந்த சமயத்தில் இருந்தே பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. எனவே அதே போலவே லியோ படத்திலும் காட்சி இருப்பதால் அதுவும் சொதப்பி விடுமோ என பங்கமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.  இருப்பினும் படத்தை விக்ரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் இயக்குவதால் அந்த காட்சி வேற லெவலில் இருக்க போகுது என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir