செம மாஸான லுக்கில் நம்ம ‘லெஜண்ட் அண்ணாச்சி’.! வைரலாகும் புகைப்படங்கள்.!
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்து படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் என்றே கூறலாம். இவருடைய நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான “தி லெஜண்ட்” திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சரவணன் அருள் அடுத்ததாக தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இதற்கிடையில், அவ்வபோது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களையும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாவது உண்டு.
அந்த வகையில், தற்போது தாடி மீசையுடன் மிகவும் ஸ்டைலான லுக்கில் சரவணன் அண்ணாச்சி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறறது. புகைப்படங்களில் அண்ணாச்சி கூலிங் க்ளாஸ் போட்டுகொண்டு மஞ்சள் நிற கோர்ட் அணிந்துள்ளார்.
எனவே, இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அண்ணாச்சி இந்த லுக்கில் மாஸாக இருக்கிறே என கருத்துக்களை பதிவிட்டுள்ளார். மேலும், இவர் நடித்த “தி லெஜண்ட்” திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
New Transition…
Details Soon…#Legend #TheLegend #LegendSaravanan #NewEraStarts pic.twitter.com/PilzbEHQut— Legend Saravanan (@yoursthelegend) March 13, 2023