ஹாலிவுட்டில் நம்ம ஊரு மண்டேலா! யோகி பாபுவுக்கு அடித்த பம்பர் வாய்ப்பு!
தயாரிப்பாளர் டெல் கே. கணேசன் இயக்கும் 'ட்ராப் சிட்டி' எனும் ஹாலிவுட் படத்தில் நடிகர் யோகிபாபு நடித்துள்ளார்.
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல வளர்ந்து கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். தமிழில் டாப் நடிகர்களுடன் காமெடி நடிகராக நடித்து வந்த அவர் இப்போது ஹாலிவுட்டுக்கு சென்று அங்கு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலிலும் அறிமுகமாகிவிட்டார். அதனை தொடர்ந்து இப்போது தயாரிப்பாளராக ஹாலிவுட்டில் கலக்கி கொண்டிருந்த டெல் கே கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ட்ராப் சிட்டி” என்கிற படத்தில் நடித்துள்ளதன் மூலம் யோகி பாபு ஹாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார்.
திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கணேசன், நடிகர் நெப்போலியனை ஹாலிவுட்டுக்கு அறிமுகப்படுத்திய திரைப்படத் தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்குகிறார். டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ் என்ற திரைப்படத்தில் நெப்போலியனை கணேசன் நடிக்க வைத்தார். அந்த படத்தை கணேசன் தான் தயாரித்திருந்தார்.
இந்நிலையில், அவரை தொடர்ந்து யோகி பாபு காமெடிகளை பார்த்து ரசித்த கணேசன் இவரையும் ஹாலிவுட்க்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக “ட்ராப் சிட்டி” படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகளை வழங்கியுள்ளது. மேலும், இந்த “ட்ராப் சிட்டி” படத்தில் இதில் பிராண்டன் டி. ஜாக்சன், ஜே ‘ஜீஸி’ ஜென்கின்ஸ், நெப்போலியன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
மேலும் யோகி பாபு இதில், ஆங்கில ராப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனைப் போல நடனமாடும் காட்சியும் உள்ளது என்றும், ‘ட்ராப் சிட்டி’ பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் ட்ரைலர் பலரையும் கவனத்தில் ஈர்த்துள்ளது. மேலும், ஹாலிவுட்டுக்கு நடிக்க சென்ற யோகி பாபுவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.