எங்க ஜோடி பொருத்தம் சூப்பர்…அவுங்க சிம்ரன் மாதிரி…பிரியாவை வெட்கப்பட வைத்த எஸ்ஜே சூர்யா.!!
நடிகர் எஸ்.ஜே.சூர்யா இய்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுகாக செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் ராதா மோகன், நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் படத்தில் நடித்த சக நடிகர்கள், நடிகைகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், செய்தியாளர் ஒருவர் ‘மான்ஸ்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் பிரியா பவானியுடன் எதற்காக நடித்தீர்கள்..? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த எஸ்.ஜே.சூர்யா ‘சிம்ரன் மேடம் முக பாவனை இன்னொரு முகத்துக்கும் பொருத்தமா இருக்கும். ஷாரூக்கானுக்கும் கஜோலுக்கும் அப்படி இருக்கும்.
எனவே, அதைப்போல தான் எனக்கும் பிரியா பவானி சங்கருக்கும் எனக்கும் செட் ஆகும். எங்க ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கும். நானும் சிம்ரனும் இருந்த போட்டோ ஒன்றையும். ‘பொம்மை’ படத்தில் நானும் பிரியாவும் இருந்த போட்டோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு இருந்தேன். சிம்ரன் போலவே பிரியா இருந்தாங்க அதன் காரணமாக தான் அவருடன் நடித்தேன்.