28 வயதிலே இளம் இசையமைப்பாளர் மரணம்.! அதிர்ச்சியில் தமிழ் சினிமா…

RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே மரணம் அடைந்தது கோலிவுட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன், அவர் உடல் நலக்குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 6.30 மணிக்கு உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது உடல் இன்று (02.05.2024) மாலை 6 மணி அளவில் வடக்கு வாசலில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது. பின்னர், அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிகிறது. பிரவீன்குமார் இராக்கதன், மேதகு ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025