ஒத்தையடி பாதையில பாடல் புரிந்த சாதனை
- கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளி வந்த படம் “கனா “.
- இந்த படத்தில் இடம் பெற்ற ‘ஒத்தையடி பாதையில ‘ பாடல் தற்போது யுடுப்பில் 25 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளி வந்த படம் “கனா “.இந்த படத்தில் நாயகனாக நடிகர் தர்சன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.
இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் அருண்ராஜாகாமராஜ் இயக்கியுள்ளார்.இந்த படம் பல்வேறு பிரிவுகளில் பல விருதுகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.
இதையடுத்து இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பரவி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் இடம் பெற்ற ‘ஒத்தையடி பாதையில ‘ பாடல் தற்போது யுடூப்பில் 25 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.