ஆஸ்கர் விருதுகள் 2025 : யார் யாருக்கு விருதுகள்? மெகா லிஸ்ட் இதோ…

ஆஸ்கர் 2025-ல் சிறந்த நடிகராக அட்ரியன் பிராடி (தி ப்ரூட்டலிஸ்ட் ), சிறந்த நடிகையாக மைக்கி மேடிசன் (அனோரா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Oscar 2025 - Best Actress - best Actor - best film

லாஸ் ஏஞ்செல்ஸ் : கடந்த ஆண்டுக்கான சிறந்த திரைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆஸ்கர் சினிமா விருதுகள் இந்தாண்டும் அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்று வருகிறது. 97வது ஆஸ்கர் விருது விழாவில் விருது வென்றவர்களின் விவரங்கள் இன்று காலை 5.30 மணி (இந்திய நேரப்பபடி) முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

  • சிறந்த நடிகர் – அட்ரியன் பிராடி (Adrien Brody) (திரைப்படம் – தி ப்ரூட்டலிஸ்ட் (The brutalist)).
  • சிறந்த நடிகை – மைக்கி மேடிசன் (Mikey Madison) (அனோரா – Anora).
  • சிறந்த திரைப்படம் – அனோரா (Anora)
  • சிறந்த இயக்குனர் – சீன் (Sean Baker) (திரைப்படம் அனோரா (Anora)).
  • சிறந்த துணை நடிகர் – கீரன் கல்கின்  (The Real Pain)
  • சிறந்த துணை நடிகை – ஜோ சல்டானா (Emilia Perez)
  • சிறந்த சர்வதேச திரைப்படம் – ஐயம் ஸ்டில் ஹியர் (I’m Still Here) – பிரேசில்.
  • சிறந்த ஒரிஜினல் திரைக்கதை – அனோரா (Anora)
  • சிறந்த தழுவல் திரைக்கதை – கான்க்ளேவ் (Conclave)
  • சிறந்த ஒரிஜினல் இசை – தி புருடலிஸ்ட் (The brutalist).
  • சிறந்த ஒளிப்பதிவு – தி புருடலிஸ்ட் (The brutalist)
  • சிறந்த எடிட்டிங்  – அனோரா
  • சிறந்த ஒலி அமைப்பு – டியூன் 2 (Dune 2)
  • சிறந்த விஷுவல் எபெக்ட் – டியூன் 2 (Dune 2)
  • சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஃப்ளோ (Flow)
  • சிறந்த அனிமேஷன் குறும்படம் – இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் (In the Shadow of the Cypress).
  • சிறந்த ஆவணப்படம் – நோ அதர் லேண்ட்
  • சிறந்த ஆவண குறும்படம் -தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
  • சிறந்த ஒரிஜினல் பாடல் – எமிலியா பெரெஸின் (Emilia Perez) எல் மால் (El Mal ).
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (Production Design) – விக்கெட் (Wicked).
  • சிறந்த ஒப்பனை – சப்ஸ்டன்ஸ் (Substance)
  • சிறந்த உடை – விக்கெட் (Wicked).

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்