சினிமா துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஒரு விருது என்றால் ஆஸ்கர் விருது என்று கூறலாம். அந்த வகையில், 96வது ஆஸ்கர் விருது அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுகளில் தேர்வாகியுள்ள படங்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
சிறந்த இயக்குனர் பிரிவில் அதிகமுறை (இதுவரை அதாவது 10 முறை) ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைப்பட்ட வாழும் இயக்குனர் என்ற சாதனையை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி படைத்திருக்கிறார்.
ஆம், 81 வயதான மார்ட்டின்ஸ் கோர்செஸி, ஹாலிவுட் சினிமாவில் இதுவரை 25 திரைப்படங்கள், 16 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில், இவரது இயக்கத்தில் வெளியான ‘Killers of the Flower Moon’ திரைப்படம் இந்த ஆண்டு அகாடமி விருதுகளில் சிறந்த படம் உட்பட மொத்தம் 10 பிரவுகளில் தேர்வாகியுள்ளது.
ஆஸ்கர் விருது : 13 பிரிவுகளில் தேர்வான ஓப்பன்ஹெய்மர்!
இப்போது, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் படி, வாழும் இயக்குனர்களில் ஸ்கோர்செஸி அதிக ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற இயக்குனராக இருந்தாலும், இவருக்கு முன்னதாக அதிக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் வில்லியம் வைலர் ஆவார். அவர் 12 பரிந்துரைகளுடன் சாதனை படைத்துள்ளார், இதுவரை யாரும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை. ஆனால், அவர் 1981 இல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…