அடுத்து ஆஸ்கர் தான்! ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் பரிந்துரை.!
2023 ஆஸ்கர் விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பரிந்துரையில் ‘RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பிடித்துள்ளது.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர்(RRR) திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 3 மொழிகளில் வெளியாகி உலக அளவில் அதிகமாக வசூல் சாதனை படைத்திருந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணியின் இசையில் வெளியான ‘நாட்டு நாட்டு’ பாடல் இந்த 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளின் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் மார்ச் 12இல் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ள 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்கான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதே ‘நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.