ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பின் தலைவர் ஜான் பெய்லி மீது 3 இளம் பெண்கள் பாலியல் புகார்..!
சினிமா துறையில் முக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் கடந்த 2 வாரங்களுக்கு முன் நடைபெற்றது.
ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் (Academy of motion pictures) அமைப்பின் தலைவராக இருக்கும் 75 வயதான ஜான் பெய்லி மீது தொடர்ச்சியாக பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்தான் ஆஸ்கர் அமைப்பின் தலைவராக இவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக 3 இளம் வயது பெண்கள், இவர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமைப்பு ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் நிர்வாக குழுவிடம் அறிக்கை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு விளக்கம் தற்போது அளித்துள்ளது.