பாலியல் வழக்கில் சிக்கிய ஆஸ்கர் அமைப்பின் தலைவர்!
பாலியல் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அமைப்பின் தலைவர் ஜான் பெய்லி மீது புகார்கள் குவிகின்றன. சினிமா உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் 2 வாரங்களுக்கு முன் லாஸ் ஏஞ்சல்சில் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், ஆஸ்கர் விருதுகளை வழங்கும் Academy of motion pictures அமைப்பின் தலைவராக இருக்கும் ஜான் பெய்லி மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக 3 பெண்கள் ஜான் பெய்லி மீது குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் புகார்கள் அளித்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து அமைப்பு ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் நிர்வாக குழுவிடம் அறிக்கை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.