BAFTA Awards 2024: 7 விருதுகளை வென்ற ‘Oppenheimer’ திரைப்படம்.!

Oppenheimier - BAFTAs 2024

இங்கிலாந்தில் நடைபெற்ற ‘BAFTA’ திரைப்பட விருது விழாவில், இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஹாலிவுட் திரைப்படமான “Oppenheimer” திரைப்படம் 7 விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. அதன்படி, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் விருது வென்றுள்ளது.

இதனிடையே, சினிமா துறையில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. மார்ச் 10ம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது விழாவின் முன்னோட்டமாக ‘BAFTA’ திரைப்பட விருது விழா பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பார்பி’ திரைப்படம் இந்த ‘BAFTA’ திரைப்பட விருது விழாவில், எந்த விருதுகளையும் பெறாதது அப்படத்தின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

விருதுகளை குவித்த ‘Oppenheimer’

  1. சிறந்த திரைப்படம்
  2. சிறந்த இயக்குனர்
  3. சிறந்த நடிகர்
  4. சிறந்த துணை நடிகர்
  5. சிறந்த ஒளிப்பதிவு
  6. சிறந்த எடிட்டிங்
  7. சிறந்த பின்னணி இசை

கிராமி விருதுகள் 2024: வெற்றியாளர்களின் முழு பட்டியல்!

சிறந்த திரைப்படம்

இந்தத் திரைப்படம் Poor Things and Killers of the Flower Moon உடன் போட்டியிட்டு வெற்றி பெற்றது. விழா மேடையில், படக்குழுவுடன் இந்த விருதினை படத்தின் தயாரிப்பாளரான எம்மா தாமஸ் பெற்று கொண்டார்.

சிறந்த இயக்குனர்

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தனது முதல் சிறந்த இயக்குனர் விருதை BAFTA விருது விழாவில் பெற்றுள்ளார். இன்செப்ஷன் மற்றும் இன்டர்ஸ்டெல்லர் ஆகிய திரைப்படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும், இதற்கு முன் BAFTA விருது பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர்

பாஃப்டா விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை சிலியன் மர்பி பெற்று கொண்டார். மேலும், ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக மார்ச் 10ம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறந்த துணை நடிகர்

நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர், சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்று கொண்டார். சிலியன் மர்பிக்கு உறுதுணையாக நடத்த டவுனி, ஓப்பன்ஹெய்மர் படத்தில் லூயிஸ் ஸ்ட்ராஸ் என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

சிறந்த ஒளிப்பதிவு

Oppenheimer படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவு என்ற பிரிவிலும் விருது கிடைத்த நிலையில், கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. அந்த அளவுக்கு இயக்குனர் படத்தில் எவ்வாறு கேமராவுக்கு மெனக்கெட்டு இருப்பார்  என்று நாம் படம் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும். இந்த விருதினை படத்தின் ஒளிப்பதிவாளர் ஹோய்டே வான் ஹோய்டெமா பெற்று கொண்டார்.

சிறந்த எடிட்டிங்

ஓபன்ஹெய்மர் படத்தில்எடிட்டிங் வேலைகளை கவனித்த ஜெனிபர் லேம் சிறந்த எடிட்டிங் விருதினை பெற்றுக்கொண்டார்.

சிறந்த பின்னணி இசை

ஓபன்ஹெய்மர் படத்தின் பின்னணி இசை என்ற பிரிவில் லுட்விக் கோரன்சன் விருதை பெற்று கொண்டார். படத்தின் பேக்ரவுண்ட் ஸ்கோர் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்