Categories: சினிமா

ஆஸ்கர் விருது : 13 பிரிவுகளில் தேர்வான ஓப்பன்ஹெய்மர்!

Published by
பால முருகன்

சினிமா துறையில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஒரு விருது என்றால் ஆஸ்கர் விருது என்று கூறலாம். அந்த வகையில், 96வது ஆஸ்கர் விருது அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுகளில் தேர்வாகியுள்ள நடிகர்கள், படங்கள்  குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி, ராபர்ட் டவுனி ஜூனியர், புளோரன்ஸ் பக், எமிலி பிளண்ட், ஜோஷ் ஹார்ட்நெட் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் தான் ஓப்பன்ஹெய்மர்.

அயலான் 2 அப்டேட்! VFX காட்சிகளுக்கு மட்டும் 50 கோடியா?.

இந்த திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த சிகை அலங்காரம், உள்ளிட்ட  13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக இந்த படம் தேர்வாகி இருக்கிறது. அதன்படி, எந்தெந்த பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர்  படம் தேர்வாகியுள்ளது என்பது பின்வருமாறு…

சிறந்த ஒளிப்பதிவு

  • ஓப்பன்ஹெய்மர் – ஹோய்ட் வான் ஹோய்டெமா

சிறந்த படத்தொகுப்பு

  • ஓப்பன்ஹைமர் – ஜெனிபர் நொண்டி

சிறந்த ஆடை வடிவமைப்பு

  • ஓபன்ஹெய்மர், எலன் மிரோஜ்னிக்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு

  • ஓபன்ஹெய்மர்

சிறந்த சிகை அலங்காரம் (Best Makeup and Hairstyling )

  • ஓபன்ஹெய்மர்

சிறந்த பின்னணி இசை 

  • ஓபன்ஹெய்மர் – லுட்விக் கோரன்சன்

சிறந்த திரைக்கதை

  • ஓபன்ஹெய்மர் – கிறிஸ்டோபர் நோலன்

சிறந்த துணை நடிகை

  • எமிலி பிளண்ட் – ஓப்பன்ஹெய்மர்

சிறந்த துணை நடிகர்

  • ராபர்ட் டவுனி ஜூனியர் – ஓப்பன்ஹெய்மர்

சிறந்த நடிகர்

  • சிலியன் மர்பி -ஓபன்ஹெய்மர்

சிறந்த இயக்குனர்

  • கிறிஸ்டோபர் நோலன்- ஓபன்ஹெய்மர்

சிறந்த படம்

  • ஓபன்ஹெய்மர்

சிறந்த ஒலி 

  • ஓபன்ஹெய்மர் – வில்லி பர்டன், ரிச்சர்ட் கிங், கேரி ஏ. ரிஸ்ஸோ, கெவின் ஓ’கானல்

மேலும், இந்த விருது விழா வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. நடிகர் ஜிம்மி கிம்மல் நான்காவது முறையாக இந்த மதிப்புமிக்க விருது விழாவை தொகுத்து வழங்கவுள்ளார். பிப்ரவரி 12ஆம் தேதி துவங்கும் இந்த விழாவுக்கான பணிகள், பிப்ரவரி 27-ஆம் தேதி முடிந்து, பிறகு மார்ச் 10ஆம் தேதி இறுதி வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

14 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago