ஆஸ்கர் விருது : 13 பிரிவுகளில் தேர்வான ஓப்பன்ஹெய்மர்!
சினிமா துறையில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஒரு விருது என்றால் ஆஸ்கர் விருது என்று கூறலாம். அந்த வகையில், 96வது ஆஸ்கர் விருது அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுகளில் தேர்வாகியுள்ள நடிகர்கள், படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில், ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி, ராபர்ட் டவுனி ஜூனியர், புளோரன்ஸ் பக், எமிலி பிளண்ட், ஜோஷ் ஹார்ட்நெட் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் தான் ஓப்பன்ஹெய்மர்.
அயலான் 2 அப்டேட்! VFX காட்சிகளுக்கு மட்டும் 50 கோடியா?.
இந்த திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த சிகை அலங்காரம், உள்ளிட்ட 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக இந்த படம் தேர்வாகி இருக்கிறது. அதன்படி, எந்தெந்த பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் படம் தேர்வாகியுள்ளது என்பது பின்வருமாறு…
சிறந்த ஒளிப்பதிவு
- ஓப்பன்ஹெய்மர் – ஹோய்ட் வான் ஹோய்டெமா
சிறந்த படத்தொகுப்பு
- ஓப்பன்ஹைமர் – ஜெனிபர் நொண்டி
சிறந்த ஆடை வடிவமைப்பு
- ஓபன்ஹெய்மர், எலன் மிரோஜ்னிக்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு
- ஓபன்ஹெய்மர்
சிறந்த சிகை அலங்காரம் (Best Makeup and Hairstyling )
- ஓபன்ஹெய்மர்
சிறந்த பின்னணி இசை
- ஓபன்ஹெய்மர் – லுட்விக் கோரன்சன்
சிறந்த திரைக்கதை
- ஓபன்ஹெய்மர் – கிறிஸ்டோபர் நோலன்
சிறந்த துணை நடிகை
- எமிலி பிளண்ட் – ஓப்பன்ஹெய்மர்
சிறந்த துணை நடிகர்
- ராபர்ட் டவுனி ஜூனியர் – ஓப்பன்ஹெய்மர்
சிறந்த நடிகர்
- சிலியன் மர்பி -ஓபன்ஹெய்மர்
சிறந்த இயக்குனர்
- கிறிஸ்டோபர் நோலன்- ஓபன்ஹெய்மர்
சிறந்த படம்
- ஓபன்ஹெய்மர்
சிறந்த ஒலி
- ஓபன்ஹெய்மர் – வில்லி பர்டன், ரிச்சர்ட் கிங், கேரி ஏ. ரிஸ்ஸோ, கெவின் ஓ’கானல்
மேலும், இந்த விருது விழா வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. நடிகர் ஜிம்மி கிம்மல் நான்காவது முறையாக இந்த மதிப்புமிக்க விருது விழாவை தொகுத்து வழங்கவுள்ளார். பிப்ரவரி 12ஆம் தேதி துவங்கும் இந்த விழாவுக்கான பணிகள், பிப்ரவரி 27-ஆம் தேதி முடிந்து, பிறகு மார்ச் 10ஆம் தேதி இறுதி வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.