தமிழகம், மற்றும் ஆந்திராவில் புஷ்பா படத்தில் சமந்தா ஆடியுள்ள பாடலுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நாளை ரிலீஸ் ஆக உள்ள அந்த படத்தில் பாடல் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாராகி வெளியாக உள்ள திரைப்படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். மைத்ரி மூவீ மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. லைகா நிறுவனம் தமிழில் வெளியிட உள்ளது.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமிழில் ஊ சொல்றியா மாமா எனும் பாடலுக்கும், ஊ அண்டே மாமா எனும் தெலுங்கு பாடலுக்கும் தமிழிலும் தெலுங்கிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
அந்த பாடலில் ( தமிழிலும் , தெலுங்கிலும் ) வரிகள் ஆண்களை மிகவும் இழிவாக சித்தரித்து எழுதப்பட்டுள்ளது என தமிழகத்தை சேர்ந்த ஆண்கள் அமைப்பும், ஆந்திராவை சேர்ந்த ஆண்கள் அமைப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. அந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றன.
ஆனால், இந்த பாடல், தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் இளைஞர்கள் மத்தியில் இணையத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சமந்தா ஆட, ஆண்ட்ரியா பாட நாளை புஷ்பாவின் அந்த பாடல் காட்சி தருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…