எம்.ஜி.ஆரின் குணம் விஜயகாந்துக்கு மட்டுமே உண்டு.! அவர் இப்படி இருக்க காரணம் இவர் தான்…
நடிகர் விஜயகாந்த் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தது ஒரு புறம் இருந்தாலும் மற்றோரு பக்கம் அவர் செய்த உதவிகள் மற்றும் அவர் செய்த நற்செயல்கள் தான் மக்களுக்கு பிடிக்க ஒரு காரணம் என்றே சொல்லலாம். சாப்பாடு மற்றும் பிரபலங்கள் சந்திக்கும் பல பிரச்னைகளை விஜயகாந்த் தீர்த்து வைத்தது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான்.
அந்த வகையில், எம்.ஜி.ஆர் போல் பல நல்ல விஷயங்களை விஜயகாந்த் செய்வதுண்டாம். இப்படடிப்பட்ட மனஷனுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். திரையுலகில் இருக்கும் பிரபலங்கள் மீது எதிர்மறையான விமர்சனம் இருப்பது வழக்கம். விமர்சனம் இல்லாத நடிகர்களே இல்லை என்றே சொல்லலாம்.
அதுபோல், விஜயகாந்துக்கு அரசியல் ரீதியாக விமர்சனம் இருந்தாலும், தனிப்பட்ட மனிதனாக விஜயகாந்தை யாரும் விமர்சனம் செய்தது இல்லை. அந்த அளவுக்கு அற்புதமான மனிதன் என்றும், எல்லார் மீதும் அன்பு காட்டும் வகையில், தன்னுடன் நடிக்கும் அனைவரிடம் பாசமாக அனைத்து கொண்டு பேசுவாராம்.
யார் நீங்க? என்ன பண்ணிரீங்க? உங்க குடும்பத்தில் எத்தனை பேர்? சாப்பிட்டீங்களா இல்லையா? என ஒரு படம் ஷூட்டிங் முடிவது வரை அந்த படப்பிடிப்பில் இருக்கும் அனைவரிடமும் பேசுவாராம். இந்த குணம் எம்.ஜி.ஆரிடம் உண்டும் என்றும், எம்.ஜி.ஆர் இந்த மாதிரியான நற்செயலை தனது திரை வாழ்க்கையில் இருந்துள்ளார்.
இப்படி, எம்.ஜி.ஆரின் குணம் விஜயகாந்துக்கு மட்டுமே உண்டு என AVM பிஆர்ஓ துளசி பழனிவேல் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், அவர் பேசுகையில், அவருடைய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்துக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். விஜயகாந்த் இப்படி இருக்க ராவுத்தர் ஒரு காரணம் என்று கூறிய அவர், விஜயகாந்த் ராவுத்தரை ஒரு நண்பனாக மட்டும் பார்க்காமல், தாய் தகப்பனாக பார்த்து கொண்டார்.
எம்ஜிஆர் காலத்தில் வெற்றி கொடி நாட்டிய ரஜினிகாந்த்.! ரசிகர் செய்த காரியத்தால் ஷாக்கான சம்பவம்…
அவருக்கு ஒண்ணுன்னா துடிச்சி போயிருவாரு, ராவுத்தருக்கு உடம்பு சரியில்லை என்றால், உடனே அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பாராம். அந்த அளவுக்கு சினிமாவில் வளர்ந்து வருகையில், இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்துக்கு நண்பனாக கூடவே இருந்து பார்த்து கொண்டாராம். தனக்காக உதவிய யாரையும் மறக்காம வைத்திருக்கும் விஜயகாந்த் திருப்பியும் உதவி செய்ய கூடிய பன்பு உடையவர் என்று கூறினார்.