இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரெமோ சென், உள்ளிட்டோர் பலர் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் 2024-ஆம் ஆண்டு தொடங்கும் எனவும், அதில் தனுஷ் கதாநாயகனாக நடிப்பார் எனவும் இயக்குனர் செல்வராகவன் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து படம் எப்போது தான் தொடங்கும் என ரசிகர்கள் காத்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், படத்திற்கான அறிவிப்பு வெளியாகி 1 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் படத்தின் அப்டேட் எதும் வெளியாகவில்லை. இதனால் ஏதேனும் அப்டேட் வருமா..? எனவும் ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக காலந்து கொண்ட செல்வராகவன் “ஆயிரத்தில் ஒருவன் 2 ” குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் அடுத்த ஒரு மாதத்தில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…