ஒருத்தரை ஒருத்தர் மனிதனாக பார்க்க வேண்டும் : நடிகை அமலாபால்
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், உருவாகியுள்ள ஆடை படத்தில் நடித்துள்ளார். இப்படம் பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகை அமலாபால் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதன்பின் இவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், நிறம், சாதி, கலாச்சராத்தை தவிர்த்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், இதனால் ஏற்படும் அச்சத்தை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார். ஒருத்தர் ஒருத்தரை மனிதனாக பார்க்க வேண்டும் என்ற செய்தி சமூகத்தில் பரவ வேண்டும் என்றும், மைனா படம் முதல் ஆடை படம் வரை ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.