வெங்கட் பிரபு பிறந்த நாள் ட்ரீட்! அசத்தலாக வெளியான ‘தளபதி 68’ அப்டேட்!

thalapathy 68 update

தமிழ் சினிமாவில் சென்னை 28 திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, மாநாடு உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கினார். இதில் அவர் இயக்கிய மங்காத்தா, மாநாடு ஆகிய இரண்டு படமுமே அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.

கடைசியாக அவர் நாகசைதன்யாவை வைத்து இயக்கி இருந்த கஸ்டடி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து அவருடைய 68-வது திரைப்படத்தை இயக்குகிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து, தளபதி 68 படத்திற்கான அப்டேட் எதாவது வெளியாகுமா என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தார்கள்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தளபதி 68 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்டை கொடுத்துள்ளார். அது என்னவென்றால், ‘தளபதி 68’ படத்தின் அப்டேட் நேற்று தாய்லாந்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டது. நேற்று இரவு படப்பிடிப்பு நடந்த காரணத்தால் இன்று இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு பிறந்த நாளை முன்னிட்டு விடுமுறை என கூறியுள்ளார்.

இந்த தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி, லைலா, ஸ்னேகா,பிரசாந்த், பிரபு தேவா, வைபவ், மோகன், பிரேம் ஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்