KamalHaasan - Indian 2 [File Image]
உலகநாயகன் கமல்ஹாசன் தனது 69வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அதற்கு சினிமா துறையை தாண்டி அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு, “வீரசேகரன் சேனாபதி என்கிற கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம் லைக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், முன்னதாக (நவம்பர் 3ம் தேதி) அன்று படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியீட்டது குறிப்பிடதத்க்கது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ”இந்தியன் 2” திரைப்படம், தமிழ் சினிமாவில் இன்னும் வெளியாகாமல் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் படங்களில் ஒன்று. இந்த படத்தினுடைய முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டாவது பாகத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருக்கிறர்கள். படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசையமையாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று…
சென்னை : பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நேற்று மாலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று…