தீபாவளி 2023 ஸ்டார்ட்! நாளை வெளியாகும் 3 படங்கள்!
வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (நவ 10 ) வெள்ளிக்கிழமை 3 தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ‘ இந்த திரைப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜப்பான்
இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் சுனில், அணு இமானு வேல் என பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
ரெய்டு
இருகப்பற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு பிரபல இயக்குனரான கார்த்தி என்பவர் இயக்கத்தில் ‘ரெய்டு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். இந்த திரைப்படமும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முறை 3 திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் 3 படங்களில் எந்த படம் அதிகமாக ஓப்பனிங்கில் வசூல் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.