மலரும் நினைவுகளை ஞாபகபடுத்திய கோமாளி படத்திலிருந்து ஒளியும் ஒலியும் பாடல் வீடியோ வெளியானது!
ஜெயம் ரவி பல்வேறு கெட்டப்களில் நடித்து அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கசாமி இயக்கி உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக ஒளியும் ஒலியும் எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் 90கிட்ஸ்-இன் மலரும் குழந்தை பருவ நினைவுகளை ஞாபகப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.