பழைய நயன்தாரா வந்துட்டாங்க! குத்தாட்டம் போட்ட வீடியோவை பார்த்து குஷியான ரசிகர்கள்!
நடிகை நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது .
இந்த படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் , படத்தில் இருந்து அடிக்கடி அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த அளவிற்கு சூப்பரான பாடல்களை இசையமைப்பாளர் அனிருத் கொடுத்து இருந்தார்.
இதனையடுத்து அடுத்ததாக தற்போது மூன்றாவது பாடல் ஜவான் படத்திலிருந்து வெளியாகியுள்ளது. இந்த மூன்றாவது பாடலில் நடிகை நயன்தாரா நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் நடனமாடியது போல மிகவும் ஸ்டைலாக உடை அணிந்து ஷாருக்கானுடன் சூப்பராக நடனமாடியுள்ளார்.
பாடலில் ஒரு இசையும் மிகவும் அருமையாக இருப்பதால் இந்த பாடலும் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது . பாடலில் வரும் சில காட்சிகளில் நயன்தாரா பழைய நயன்தாரா போல இருப்பதால் அதற்கான வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ‘வின்டேஜ் நயன்தாரா திரும்பி வந்துட்டாங்க ‘ என கூறி வருகிறார்கள்.
Bad VIBE’u, Sad LIFE’u Odumae !
VINTAGE #Nayanthara is back ????????????????#NotRamaiyaVastavaiya
— KARTHIK DP (@dp_karthik) August 29, 2023
மேலும், ஜவான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.