நடிகை அஞ்சலி 36 வயதாகியும் யாரையும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதால் அடிக்கடி இவருடைய திருமணம் குறித்த சில வதந்தி தகவலும் அடிக்கடி இணையத்தில் வைரலாவது உண்டு.
அந்த வகையில், கடந்த ஆண்டு கூட அஞ்சலி பிரபல இயக்குனர் ஒருவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தீயாய் ஒரு தகவல் பரவியது. பிறகு அதற்கு இது வெறும் வதந்தி என அஞ்சலி விளக்கம் கொடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அஞ்சலிக்கு மீண்டும் திருமணம் நடைபெறவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அஞ்சலிக்கு அவருடைய பெற்றோர் மாப்பிளை பார்த்துவிட்டதாகவும், அதற்கு அஞ்சலியும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான திருமண செய்திக்கு இது உண்மை இல்லை என அஞ்சலி மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் இம்முறை அஞ்சலி மறுப்பு எதுவும் சொல்லாமல் இருப்பதால் உண்மையாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்ப தொடங்கி உள்ளனர்.
மேலும். நடிகை அஞ்சலி கடைசியாக மலையாளத்தில் இரட்டா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் RC15 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…