ஐயோ விஷாலுக்கு என்னாச்சு? மேடையில் நடுங்கியதால் ரசிகர்கள் கவலை!

மதகஜராஜா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கைநடுக்கத்துடன் பேசிய நடிகர் விஷாலை பார்த்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

vishal health

சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் வெளியாவதை முன்னிட்டு படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில், விஷால், சுந்தர் சி, குஷ்பூ, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். விழாவில் பேசிய விஷால் பேசவே முடியாமல் கை நடுக்கத்துடன் பேசிக்கொண்டிருந்தார். அது மட்டுமின்றி அவருடைய கெட்டப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இருந்தது. எனவே, விஷாலுக்கு உடல் நலம் சரியில்லயா என நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.

விழா தொடங்கியவுடன் படத்தின் பாடல்களை பற்றி பேசியபோது சுத்தமாக பேசவே முடியாத அளவுக்கு விஷாலின் கைகள் நடுங்கியது. உடனடியாக டிடி விஷாலை நாற்காலியில் அமர வைத்து பேச வையுங்கள் என கூறினார். பின் விஜய் ஆண்டனி அவருக்கு உதவி செய்து அமர வைத்தார்.

விஷாலுக்கு என்னதான் ஆச்சு? 

விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் இருந்த காரணத்தால் தான் அவருக்கு கைகள் நடுங்கியதாகவும் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி விளக்கம் அளித்தார். படம் கிட்டத்தட்ட 12 ஆண்டுக்கு பின் ரிலீஸ் ஆக உள்ளதால் அந்த விழாவை புறக்கணிக்க கூடாது என்கிற நோக்கத்தில் காய்ச்சலையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த காலகட்டத்தில் சிலர் பட ப்ரோமோஷன் என்றாலே அதிர்ச்சியாகிவிடுகிறார்கள். ஆனால், விஷால் காய்ச்சலில் கூட ப்ரோமோஷனுக்கு வந்துள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது. விரைவில் அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் குணமாகி பழைய ஆக்சன் ஹீரோவாக விஷால் திரும்பவேண்டும் எனவும் அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்