தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வரும் யோகி பாபு தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் இல்லாத பெரிய படங்களே இல்லை என்கிற அளவிற்கு ஜவான், வாரிசு, ஜெயிலர், என பல படங்களில் நடித்து வருகிறார்.
இதை தவிர்த்து, ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ கோயிலில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.
இவர்களுக்கு விசாகன் என்ற ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. ஆனால், இதுவரை யோகி பாபு தனது மகனின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது அவரின் மகன் புகைப்படமும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
நேற்று யோகி பாபு தனது 37-வது பிறந்த நாளை தனது வீட்டில் வைத்து கொண்டாடியுள்ளார். அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகை சஞ்சனா சிங் கலந்து கொண்டிருக்கிறார் . அப்போது யோகி பாபுவின் மகனுடன் எடுத்த வீடியோவை சஞ்சனா வெளியிட்டு இருக்கிறார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் யோகி பாபாவின் மகனா இது அப்படியே அப்பாவைப்போல இருக்கிறார் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…