தளபதி 66 படத்தில் இணைந்த குஷி பட பிரபலம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இணையத்தில் தளபதி 66 படத்தில் முன்னதாக தமிழ் சினிமாவில் கலக்கி வந்த ஷாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தீயாக பரவி வந்தது. ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனை உறுதி படுத்தும் வகையில், நடிகர் ஷமே தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கு முன்பு ஷாம் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram