இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்திலிருந்து வெளியான சில்லா சில்லா பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த பாடலை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் துணிவு படம் பற்றி பேசி அஜித் ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் ” துணிவு படத்தில், நடிகர் அஜித்தின் லுக்கில்,
ஒரு சின்ன முன்னோட்டத்தை பார்த்ததற்கே ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களுடைய கொண்டாட்டத்தை நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
இதையும் படியுங்களேன்- பணிவா சொன்னா ஏத்துக்கலாம் துணிவா நின்னா வா பாத்துக்கலாம்.! பரபரப்பை கிளப்பிய வாரிசு பேனர்.!
ஒரு சின்ன முன்னோட்டத்தை பார்த்ததற்கே இப்படி உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து, மேற்கொண்டு, நாங்கள் வெளியிடவுள்ள ப்ரொமோக்களை பார்த்தால், ரசிகர்கள் என்ன செய்வார்கள் என புரியவில்லை” என்று கூறிஉள்ளார். இதன் மூலமே படம் எந்த அளவிற்கு தரமாக வந்துள்ளது என தெரியவந்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…