கலகலப்பு 3-யில் கவின் கேட்ட சம்பளம்? தெறித்தோடிய சுந்தர் சி!

sundar c kavin

நடிகர் கவின் தற்போது டாடா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்டார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படம் எப்போது வெளியாகும் என்பதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு கவின் சில படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார். இதற்கிடையில், கவின் இயக்குனர் சுந்தர் சி உடன் இணைந்து கலகலப்பு மூன்றாவது பாகத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. பிறகு சுந்தர் சி தரப்பில் இருந்தே கலகலப்பு 3 உருவாவது உண்மை தான் படத்தில் கவின் நடிக்கவில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.

read moreSK23 படத்தோட பட்ஜெட் ‘சம்பளத்தில் போயிடும் போல’ ! பிரபலங்கள் வாங்கிய சம்பளம்! 

பிறகு படத்தில் கவின் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது உண்மை தான் எனவும், சில காரணங்களால் அவர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்ற செய்தியும் வெளியானது. இதனையடுத்து, தற்போது புதிய காரணம் குறித்த தகவல் ஒன்று  வெளியாகி இருக்கிறது. அது எண்னென்றால் சம்பள விஷயம் காரணமாக தான் இந்த கலகலப்பு 3-யில் நடிக்க கவின் மறுத்துவிட்டாராம்.

படத்தின் கதையை கேட்டு முடித்த பின் படத்தின் கதை நன்றாக இருக்கிறது. படத்தில் நடிக்க தனக்கு சம்பளமாக 6 கோடி வேண்டும் என்று கேட்டுள்ளாராம். அதற்கு சுந்தர் சி 1.30 கோடி வேண்டுமானால் சம்மதம் என்று கூறினாராம். சம்பளம் குறைவாக இருந்த காரணத்தால் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்