அப்போ துப்பாக்கி இப்போ ‘GOAT’…அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்!

GOAT படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் டிவிட்டரில் பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GOAT Twitter Review

சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த ‘GOAT’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், படத்தினை ரசிகர்கள் ஆராவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள். படம் பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருவதால் கண்டிப்பாக விஜய்க்கு பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்….

படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” கோட் படம் வெங்கட் பிரபுவின் அருமையான பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளது. முதல் பாதி அருமையாக இருந்தது, திருப்பங்கள் மற்றும் ஆச்சரியங்கள் நிரம்பியஇரண்டாம் பாதி அதை விட அருமையாக இருந்தது. இளையதளபதி விஜய் தனது அபார நடிப்பால் மனதை கவர்ந்தார். விஜய்க்கு அடுத்த பிளாக் பஸ்டர்” என கூறியுள்ளார்.

மற்றொருவர் ” கோட் படம் அருமையாக இருக்கிறது. கண்டிப்பாக பிளாக் பஸ்டர் படமாக அமையும். பரபரப்பான திருப்பங்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த ஒரு அசாதாரண திரைக்கதையை படத்தில் வெங்கட் பிரபு வழங்கியுள்ளார். தளபதியை இப்படி ஒரு ஜாலியான,  முறையில் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் பிளாஸ்ட், இளையதளபதியின் வயதான தோற்றம் மிகவும் அழகாக இருக்கிறது” எனக்கூறியுள்ளார்.

மற்றொருவர் ” முதல் பாதியை ஒரு மாதிரி நகர்ந்தாலும் இடைவேளையிலிருந்து நம்மை ஆர்பரிக்க வைத்துள்ளார் வெங்கட்பிரபு. விஜய்யின் வில்லனிசம் கரகோசம் எழுப்புகிறது திரையில். யுவன் இசை மிரட்டல். கடைசி 30 நிமிடம் பரபர… ரசிகர்களுக்கு செம விருந்து” எனக்கூறியுள்ளார்.

மற்றொருவர் ” கோட் படம் வெங்கட் பிரபுவின் சிறந்த திரைப்படம். படத்தில் இரண்டு வேடங்களிலும் விஜய் அருமையாக நடித்திருக்கிறார். படம் மூன்று மணி நேரம் என்று போவது கூட தெரியாமல் அருமையாக எடுக்கப்பட்டு இருக்கிறது” என கூறியுள்ளார்.

மற்றொருவர் ” கோட் படத்தை நடிகர் விஜய் ஒரே ஆளாக எடுத்துச்சென்றுள்ளார். டி-ஏஜிங் நன்றாக வேலை செய்தது மற்றும் தனிப்பட்ட முறையில் இரண்டாம் பாதி தனித்து நிற்கிறது” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்