இனி அந்த மாதிரி படம் தான்… கங்கனா ரனாவத் எடுத்த அதிரடி முடிவு.!
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை அருமையாக நடித்து கொடுக்க கூடியவர் என்றே கூறலாம். அதைப்போல தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவித்துவிடுவார். அதனால் ஏதேனும் சர்ச்சைகள் வருமா என்பதை பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டார்.
மத்திய அரசு தொடர்பான பிரச்னைகள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து இவர் அடிக்கடி பேசுவது வழக்கம். மேலும் தலைவி, எமர்ஜென்சி போன்று அரசியல் தலைவர்களின் வாழ்கை வரலாற்று படங்களின் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் கங்கனா ரனாவத் அரசியலுக்கு வருவார் என பலரும் எதிர்பார்த்தனர்.
இதற்கிடையில், சமீபத்திய ஒரு பேட்டியில் கங்கனா ரனாவத் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அரசியலில் போட்டியிடும் எண்ணம் தற்போதைக்கு எனக்கு இல்லை.
இதையும் படியுங்களேன்- தளபதி 67 படத்தில் சிம்பு…? தீயாய் பரவும் புதிய தகவல்.!
ஆனால், இந்திய அரசியல் மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு. நிச்சயமாக இனி வரும் காலங்களில் அரசியல் படங்களையே அதிகம் எடுப்பேன்” என்று கூறியுள்ளார். கங்கனா ரணாவத் தற்போது டிக்கு வெட்ஸ் ஷெரு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.