பாலியல் பலாத்கார புகார் : பிரபல நடிகைக்கு நோட்டிஸ்..!!
இதுகுறித்து பேசிய ஷிரோட்கர், ”வெள்ளிக்கிழமை மாலை தத்தாவுக்கு சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர் கூறியுள்ள அனைத்துப் புகார்களையும் மறுக்கிறோம். அவர் தனது வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் தத்தாவின் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும்; அல்லது நஷ்ட ஈடு கோரப்படும்” என்றார்.
நடந்தது என்ன?
2005-ம் ஆண்டில் வெளிவந்த இந்திப் படமான ‘ஆஷிக் பனாயா அப்னே’வில் அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
2009-ம் ஆண்டில் ‘ஹார்ன் ஓ.கே. பிளீஸ்’ என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கின்போது நானா படேகர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அது தொடர்பாக அப்போதே புகார் அளித்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தனுஸ்ரீ தத்தா கூறியிருந்தார். மேலும் நானா படேகரின் பாலியல் தொந்தரவுக்கு படத்தின் கொரியோகிராபர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சாமி சித்திக் மற்றும் இயக்குநர் ராகேஷ் சாரங் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் தத்தா தெரிவித்திருந்தார்.
சட்ட ரீதியிலான அச்சுறுத்தல்
நானா படேகரின் நோட்டீஸ் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தனுஸ்ரீ தத்தா, ”நானா படேகரின் வழக்கறிஞர் என்று கூறப்படுபவர் தனுஸ்ரீக்கு நெருக்கமானவர்களிடம் போனில் பேசி மிரட்டுகிறார். 10 வருடங்கள் கழித்தும் நானா படேகர் சட்ட ரீதியாக அச்சுறுத்துகிறார். ஒட்டுமொத்த உலகமும் பார்க்கும்போதே தந்திரங்களை உபயோகிக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU