சந்தோஷமோ, சோகமோ மக்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களை எப்போது வேண்டுமானாலும் கேட்பது உண்டு . அவர்கள் கேட்கும் பாடல்களின் பிளே லிஸ்டில் இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் இருக்காமல் இருக்கவே இருக்காது. அவ்வளவு பாடல்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்தவர் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா.
அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இசையமைப்பாளர் இளையராஜா அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் நாட்டில் இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இதுவரை 1000 படங்களுக்கும் மேல் 6000 பாடல்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார் ராஜா.
அவற்றில் பாடல்கள் தாண்டி அவரது பின்னணி இசை பல படங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்திருந்தது. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதை வாங்கியவர் இளையராஜா தான்.
பத்மபூஷண் விருது, 4 முறை தேசிய விருது, பல மாநில விருதுகள், சர்வதேச விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை குவித்துள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்று 80-வது பிறந்தநாளை கொண்டாடும் இளையராஜாவிற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…