அடடா! தொழில் பக்தினா இது தான்…கோலிவுட்டை வியக்க வைத்த விஜய், த்ரிஷா!

சினிமாத்துறையில் ஒரு படத்தில் நடிக்கவோ அல்லது விழாவிற்கு வருகை தரவேண்டும் என்றால் சில நடிகர்கள் நடிககைகள் கொடுத்த காஷிட் நாட்களை தவிர மற்ற நாட்களிலும் மற்றும் நேர தாமதாமாக தான் வருவார்கள். ஆனால், ஒரு சில நடிகர்கள் நடிகைகள் தான் சொன்ன தேதி மற்றும் சொன்ன நேரத்திற்கு முன்பே படப்பிடிப்பு மற்றும் நிகழ்ச்சிக்கு வந்து மற்றவர்களுக்காக காத்திருப்பார்கள்.
அப்படி ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் விஜயகாந்த் காலையில் படத்தின் படப்பிடிப்பு என்றால் 6 மணிக்கு எழுந்து படப்பிடிப்புக்கு ரெடியாகி இருப்பார். இதனை அவருடன் பணியாற்றிய பல பிரபலங்களும் கூறி நாம் பார்த்திருப்போம். இதனையடுத்து, அவரை போலவே விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் லியோ வெற்றி விழாவை முடித்துவிட்டு ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் தங்களுடைய அடுத்த படத்திற்கான படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார்களாம்.
20 பேர் வந்தால் தான் படம் போடுவோம்! இது என்ன த்ரிஷா படத்திற்கு வந்த சோதனை!
லியோ படத்தின் வெற்றி விழா கடந்த நவம்பர் 1-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவருமே நிகழ்ச்சி தொடங்கும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே வந்துவிட்டார்களாம். அதைப்போல, நிகழ்ச்சி முடிந்த பின் அதற்கு அடுத்த நாள் காலையிலயே நடிகை த்ரிஷா விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டாராம்.
அதைப்போல நடிகர் விஜய்யும் 2-ஆம் தேதி அதாவது நேற்றே தன்னுடைய 68-வது படமான தளபதி 68 படத்தின் படப்பிடிப்புக்கு தாய்லாந்திற்கு செல்லவேண்டியாதாம். ஆனால், மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்க்கவேண்டும் என்பதற்காக நவம்பர் 2 படப்பிடிப்புக்கு செல்லவில்லையாம்.
வெற்றி விழா முடிந்த கையோடு ‘தளபதி 68’ படப்பிடிப்பு சென்ற விஜய்! எந்த இடத்திற்கு தெரியுமா?
பிறகு புஸ்ஸி ஆனந்தை பார்த்துவிட்டு அவருடைய நலனை விசாரித்து விட்டு அடுத்த நாளான (இன்று நவம்பர் 3) காலையிலே தளபதி 68 படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் கிளம்பி பாங்காக் சென்றார். விஜய் நினைத்தால் ஒரு 4 நாட்கள் கூட ஓய்வு எடுத்துவிட்டு படப்பிடிப்பு செல்லலாம். ஆனால், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தன்னுடைய வேலையில் சரியாக இருக்க வேண்டும் என்று விஜய் படப்பிடிப்புக்கு செல்கிறார். அதைப்போல தான் த்ரிஷாவும். இவர்களுடைய இந்த தொழில் பக்தியை பார்த்து கோலிவுட்டே வியந்து போய் இருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025