ஜாமீனில் வெளிவராத பிரிவில் வழக்கு! பாலியல் புகார் குறித்து நிவின் பாலி சொன்னதென்ன?
இளம்பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் நிவின் பாலி மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா : மலையாள சினிமாவில் என்னதான் நடக்கிறது என்கிற அளவுக்கு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், மேலும் பரபரப்பைக் கிளப்பும் வகையில், நடிகர் நிவின் பாலி மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
நேர்யமங்கலம் பகுதியைச் சேர்ந்த, இளம் பெண் ஒருவர் நிவின் பாலி தனக்குப் பட வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி, வெளிநாட்டிற்கு அழைத்து சிலருடன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கொச்சி ரூரல் எஸ்.பி-க்கு புகார் அளித்தார். அவர் கொடுத்த அந்த புகார் ஊன்னுகல் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
read more–இளைஞரை கூட விட்டு வைக்காத மலையாள இயக்குனர்.. பாய்ந்தது மேலும் ஒரு வழக்கு.!
இதனையடுத்து, இளம்பெண் கொடுத்த புகாரை விசாரித்து அந்த பெண்ணுடைய வாக்கு மூலத்தின் அடிப்படையில், நடிகர் நிவின் பாலி, ஸ்ரீயா உட்பட 6 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், நிவின்பாலி மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தற்போது சிறப்புப் புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
நிவின் பாலி அறிக்கை
இளம் பெண் தன்னைப்பற்றி பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து நடிகர் நிவின் பாலி சமூக வலைத்தள பக்கங்களில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில், எனக்கு எதிராகக் கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு உண்மைக்குப் மிகவும் புறம்பானதும், மோசமான உள்நோக்கம் கொண்ட ஒன்று. இதற்குப் பின்னாடி யார் இருக்கிறார் என்பதைச் சட்டத்துக்கு முன் கொண்டுவர எந்த எல்லைக்கும் செல்வேன்” எனக் காட்டத்துடன் கூறியிருந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து விளக்மும் நிவின் பாலி கொடுத்தார். இது குறித்துப் பேசிய அவர் ” இந்த ஒரு விஷயத்தைப் பெரிய விஷயமாக மாற்றவேண்டும் என்பதற்காகத் தான் உடனடியாகவே நான் செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறேன். பல வருடங்கள் நான் சினிமாவில் இருக்கிறேன்.
முதல் முதலாக இந்த மாதிரி மோசமான குற்றச்சாட்டு என் மீது வைக்கப்பட்டுள்ளது. இது உண்மைக்கு மிகவும் புறம்பான விஷயம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த குற்றச்சாட்டு என்னையும், என் குடும்பத்தையும் மிகவும் பாதித்துள்ளது.
கடந்த ஒன்றரை மாதம் முன்பும் இதுபோன்று புகார் உள்ளதாக காவல்துறை அதிகாரி என்னை அழைத்திருந்தார். பிறகு அந்த பெண் யார் என்று எனக்குத் தெரியாத எனக் கூறியதால் முடிவுக்கு வந்தது. இது போன்ற விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்ற காரணத்தால் நான் அந்த சமயம் புகார் கூட கொடுக்க விரும்பவில்லை” எனவும் நிவின் பாலி கூறினார்.