ஒத்த செருப்பு பத்தாது! இரண்டு செருப்பாலையும் அடிக்கணும்!
நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தற்போது ஒத்ததச்செருப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை அவர் வித்தியாசமான கோணத்தில் அவர் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், சில வருடங்களாகவே, ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பதாகவே இணையத்தில் வெளியாகி விடுகிறது. அது போல் பார்த்திபனின் ஒத்தசெருப்பு திரைப்படமும் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்! ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை! இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியான்னு! தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது.’ என பதிவிட்டுள்ளார்.
# OS7 இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து
போடுவதும்,பார்ப்பதும்
அருவருப்பான செயல்!ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை!இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு!Theatre-ல் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது pic.twitter.com/3FyiuS9fYp— R.Parthiban (@rparthiepan) September 24, 2019