சம்பளமே வேண்டாம்! விஜய்க்காக விஜயகாந்த் செய்த உதவி?

Vijayakanth

Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்  நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும்  விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் பல தயாரிப்பாளர்களுக்கு, பல இயக்குனர்களுக்கு பட வாய்ப்புகள் கொடுத்து பெரிய உதவிகளை செய்து இருக்கிறார். அதைப்போல ஒரு சிலர் நடிகர்களுக்காகவும் கூட அவர்களுடைய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து அவர்களுக்கு பெயரையும் வாங்கி கொடுத்து இருக்கிறார். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் செந்தூரபாண்டி படத்தில் விஜய் வளர்ச்சிக்காக விஜயகாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

இந்த செந்தூரபாண்டி படத்தை இயக்கியது இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தான். இந்த படத்திற்கு முன்னதாக அவர் விஜய்யை வைத்து நாளையை தீர்ப்பு என்ற படத்தை இயக்கி தயாரித்தும் இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்ற காரணத்தால் வரும் ரீதியாக 90 லட்சம் வரை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நஷ்டம் ஏற்பட்டதாம்.

அந்த நஷ்டத்தை எப்படி ஈடு கட்டுவது என்று தெரியாமல் எஸ்.ஏ.சந்திரசேகர் முழித்துக் கொண்டிருந்தாராம். ஏனென்றால் சம்பாதித்த மொத்த பணத்தையும் வைத்து தான் அவர் விஜயை வைத்து நாளையை தீர்ப்பு படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்திருந்தாராம். ஆனால் சரியான லாபத்தை அந்த படம் கொடுக்கவில்லை என்பதால் பணரீதியாக எஸ்.ஏ சந்திரசேகருக்கு பெரிய அடி விழுந்ததாம்.

பிறகு விஜயகாந்த் சந்தித்து பேச வேண்டும் என்று விஜயகாந்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் போன் செய்தாராம். போன் செய்துவிட்டு நான் உங்களை பார்க்க வேண்டும் என்று கூறினாராம். கூறிவிட்டு பத்து நிமிடத்தில் அவருடைய வீட்டிற்கு சென்றுவிடலாம் என கிளம்பி கொண்டிருந்தபோது விஜயகாந்த் எஸ்.ஏ சந்திரசேகரின் வீட்டிற்கு நேரில் வந்து விட்டாராம்.

நேரில் வந்த பிறகு என்ன நீங்களே நேரில் வந்து விட்டீர்கள் என்பது போல எஸ்.ஏ.சந்திரசேகர்  இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டாராம். அதன் பிறகு என்னுடைய மகனை சினிமாவில் அறிமுகம் செய்யலாம் என்று முடிவெடுத்து ஒரு  படத்தை இயக்கப் போகிறேன் அந்த படத்தில் நீங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டாராம்.

உடனடியாக விஜயகாந்த் நான் கண்டிப்பாக நடிக்கிறேன். இதனை நீங்கள் போனில் சொல்லி இருந்தாலே நானே நடித்து இருப்பேன் என்று கூறினாராம். பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் சம்பளம் எவ்வளவு வேண்டும் என்பது போல கேட்டாராம். அதற்கு விஜயகாந்த் சம்பளம்  எல்லாம் முக்கியமே இல்லை விஜயின் வளர்ச்சி தான் முக்கியம் என்று கூறி அந்த படத்தில் சம்பளமே இல்லாமல் நடித்து கொடுத்தாராம். படமும் நல்ல வரவேற்பு பெற்று விஜய்க்கும் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. வசூல் ரீதியாகவோ எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நல்ல லாபம் கிடைத்தது. விஜயகாந்த் செய்த இந்த உதவியை மறக்கவே முடியாது என எஸ்.ஏ.சந்திரசேகர்  பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்